Wednesday, July 16, 2014
On Wednesday, July 16, 2014 by Anonymous in Break

சென்னை: தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சியான பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கி 25 ஆண்டுகள் ஆவதையொட்டி இன்று அதன் வெள்ளி விழா தொடங்கியது. இதைத் தொடர்ந்து சென்னையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில், முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி தலைமையில் இனிப்பு வழங்கியும், கட்சிக் கொடியேற்றியும் விழா கொண்டாடப்பட்டது. பின்னர் மூர்த்தி செய்தியாளர்களிடம் பேசுகையில், பாமகவை வலுப்படுத்துவது தொடர்பாக வரும் 20ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ள மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். தமிழகத்தில் பாமக எப்போதும் ஆரோக்கியமான ஒரு எதிர்க்கட்சியாகவே செயல்பட்டு வருகிறது. 23ஆம் தேதி நடைபெறவுள்ள டெல்டா மாவட்ட விவசாயிகளின் போராட்டத்திற்கு பாமக முழு ஆதரவு அளிக்கும். கட்சி கடந்து வந்த பாதை, சந்தித்த சோதனைகள், பல்வேறு போராட்டங்கள் நடத்தி மக்கள் மனதில் இடம் பெற்றிருப்பதை சுட்டிக்காட்டி தொடர்ந்து மக்கள் பணியை இன்னும் சிறப்பாக நிறைவேற்ற வெள்ளி விழாவில் சபதம் ஏற்போம். இன்று ராயபுரம் சட்ட மன்ற தொகுதியில் சுமார் 250 இடங்களில் கட்சிக் கொடி ஏற்றப்படுகிறது. இதேபோல் 16 தொகுதியிலும் தொடர்ந்து விழாக்கள் நடைபெறும். நாளை ஆர்.கே.நகரில் நடக்கிறது. 1-ந்தேதி சைதாப்பேட்டையில் நிறைவு பெறுகிறது. அனைத்து தொகுதிகளிலும் வருகிற 1-ந்தேதிக்குள் 2500 இடங்களில் கொடி ஏற்றப்படும் என்றார் மூர்த்தி.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
கர்நாடக இசைக்கலைஞர் மாண்டலின் சீனிவாஸ் மறைவுக்கு, முதல்-அமைச்சர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், அவர் விட்டுச்சென்ற இடத்தை இனி யா...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
-
தமிழகத்தில் பெயிண்ட் மற்றும் ஓவிய தொழில் பார்ப்பவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில...
0 comments:
Post a Comment