Saturday, February 15, 2020

On Saturday, February 15, 2020 by Tamilnewstv in ,    
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ?


திருச்சி மன்னார்புரத்தில்  தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறுவனம் எல்பின் இந்நிறுவனத்தின் இயக்குனர் அழகர்சாமி ( எ ) ராஜா, SRK ( எ ) ரமேஷ்  மற்றும் பங்குதாரர்கள் மீதும் பலரை ஏமாற்றிய பல  வழக்குகள் பல மாவட்டங்களிலும் நிலுவையில் உள்ளது.

தற்போது மதுரை திருச்சி மற்றும் தஞ்சை மாவட்ட காவல்துறை அதிகாரிகள் நேர்மையாக துரிதமாக செயல்பட்டு எல்பின் நிறுவனத்தை மூடி சீல் வைக்கவுகும் ,ராஜா, ரமேஷ் இருவரையும் கைது செய்யவும்  முழு முயற்ச்சியில்  ஈடுபட்டு வருவதால், இவர்கள்  சார்ந்திருந்த கட்சியின் தலைவர்  இவர்களது செயல்பாடுகளுக்கு ஒத்து வராததால் தானோ

தற்போது காவல்துறையினரின் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிப்பதற்காக பாரதிய ஜனதா கட்சியின் எச். ராஜா அவர்களை நேரில் சந்தித்து அந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பரப்பி வந்தனர்.
எச். ராஜா அவர்களை நேரில் சந்தித்தபோது  கிலோ கணக்கில் எடையுள்ள  விக்கிரகம் ஒன்றை பரிசுப் பொருளாக வழங்கி உள்ளனர்.

எங்களை எப்படியாவது வழக்கில் இருந்து காப்பாற்றுங்கள் எனக் கூறி தங்க விக்கிரகத்தை வெள்ளி முலாம் பூசி வழங்கியதாக ஒரு தகவல் வருகிறது இது உண்மையா பொய்யா என தெரியவில்லை.

ஆனால் அழகர்சாமி ( எ) ராஜாவும் ரமேஷ் என்கிற ரமேஷ் குமார் ரகசியமாகச் சென்று எச். ராஜாவை சந்தித்ததன் பின்னணி என்ன ? பொதுமக்கள் ஒரே குழப்பத்தில் உள்ளனர்.

0 comments: