Saturday, February 15, 2020

On Saturday, February 15, 2020 by Tamilnewstv in ,    
திருச்சி பிப் 15

தஞ்சையில் நடைபெறும் இந்து மக்கள் கட்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனசதாப்தி ரயில் மூலம் கோவையிலிருந்து அர்ஜுன் சம்பத் தஞ்சாவூர் சென்றார். வழியில் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட் சிறப்பான முறையில் உள்ளது. குறிப்பாக பெண்கள், முதியவர்கள் வளர்ச்சித் திட்டம், அத்திக்கடவு- அவினாசி திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு, நீர்நிலைகள் மேம்பாடு திட்டம், விவசாயிகள், மாணவர்கள் நலன் சார்ந்த திட்டங்கள் ஆகியவை வரவேற்கத்தக்கது. கிறிஸ்தவ தேவாலயங்கள், இஸ்லாமிய மசூதிகளில் பராமரிப்புக்கு தலா 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் தமிழகத்தில் கோயில்கள் பராமரிப்புக்கும் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். முதியோர் பராமரிப்பு இல்லம் மாவட்டந்தோறும் தொடங்க அறிவிக்கப்பட்டுள்ளது. இதை கிறிஸ்தவ தன்னார்வத் தொண்டு நிறுவனமத்துடன் இணைந்து செய்வது ஆபத்தானது. கல்வி, சேவை என்ற பெயரில் ஏற்கனவே மதமாற்றம் நடைபெற்று வருகிறது. அரசு நேரடியாக இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இல்லையென்றால் ராமகிருஷ்ணா சேவை நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட வேண்டும்.
  ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இந்திய குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டம் என்று கூறி வன்முறை சம்பவங்கள் நடந்து வருகிறது. கடந்த முறை 2,000 பேர் திரண்டு காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். அப்போது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். குடியுரிமை சட்ட விவகாரத்தை அரசியல் பிரச்சாரமாக மாற்றி அப்பாவி  இஸ்லாமியர்களை பயன்படுத்துகின்றனர். நேற்று சென்னை வண்ணாரப்பேட்டையில் நடந்தது நடந்தது தவறான முன்னுதாரணமாகும். போலீசார் தக்க நடவடிக்கை எடுத்து  இதை சரியான முறையில் கையாள வேண்டும்.
 திமுக தலைவர் ஸ்டாலின் அரசியல் சுயலாபம் தேடுவதற்கும், சட்டம் ஒழுங்கு பிரச்சினையை தூண்டி விடவும் முயற்சி செய்கிறார். இந்த முயற்சியை முறியடிக்க வேண்டும். மத வழிபாட்டுத் தலங்களில் தேசத்திற்கு எதிரான பிரச்சாரத்தை தடை செய்ய வேண்டும். எஸ்டிபிஐ, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா போன்ற அமைப்புகளை தடை செய்ய வேண்டும். அவற்றை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். நேற்றிரவு மதுரை, கோவை, சென்னை உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற போராட்டம் காரணமாக பொதுமக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஸ்டாலின் நேற்றைய இரவு கருப்பு இரவு என்று கூறியது சரிதான். அதிகமான பொதுமக்கள் தங்கள் வீட்டுக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். இஸ்லாமியர்களின் ஓட்டு வங்கிக்காக திமுக இது போன்று செயல்படுகிறது. குடியுரிமை சட்டம் குறித்து இஸ்லாமியர்கள் மத்தியில் அவதூறு பிரச்சாரம் செய்து சட்டம் ஒழுங்கு பிரச்சனையை தூண்டிவிடும் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறது. இது கண்டிக்கத்தக்கது. வெளிநாட்டு இஸ்லாமியர்கள் நம் நாட்டிற்குள் ஊடுறுவுவதற்காக ஸ்டாலின் கையெழுத்து இயக்கம் நடத்தி உள்ளார். திமுக கொள்ளிக்கட்டையை எடுத்து தலையைச் சொறிந்து கொள்கிறது. இது பின்னாளில் திமுகவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றார்.

0 comments: