Friday, February 23, 2018

On Friday, February 23, 2018 by Tamilnewstv in ,    


திருச்சி         22.2.18

இந்தியாவிற்காக சிலம்பாட்ட போட்டியில் தங்கம் வென்ற திருச்சி யுகேஷ்குமார்


சர்வதேச ஆசிய நாடுகள் பங்குப் பெற்ற விளையாட்டுப் போட்டிகள் பாக்ஸிங், சிலம்பாட்டம், வில்வித்தை, ஜிம்னோஸ்டிக் என்பன போட்டிகள் டெல்லியில் நடைப்பெற்றன. இப்போட்டியில்  பங்களாதேஷ், ஈரான், மலேசியா, சிங்கப்பூர், ஜப்பான், தாய்லாந்து, நேபாளம், ஈராக், இந்தியா உட்பட 9 நாடுகள் கலந்து கொண்டனர். 


இந்த விளையாட்டு போட்டிகளில் திருச்சியை சேர்ந்த 21 பேர் தங்கம், வெள்ளி பரிசுகளை வென்றனர். அதில் திருச்சி பாலக்கரை செங்குளம் காலனியை சேர்ந்த யுகேஷ்குமார் - 11-ம் வகுப்பு மாணவன் 2 நாள் டெல்லியில் நடைப்பெற்ற சிலம்பாட்ட போட்டியில் சிறப்பாக விளையாடி முதல் பரிசாக தங்கம் வென்றார்.

செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த யுகேஷ்குமார் :
நான் கற்ற இந்த கலையை மற்றவருக்கு கற்றுக் கொடுத்து தங்கம் வெல்ல செய்வேன் என்று தெரிவித்தார்

0 comments: