Thursday, February 22, 2018

On Thursday, February 22, 2018 by Tamilnewstv in ,    
திருச்சி            22.2.18




விருந்தோம்பலில் வணிக விடுதி பட்டத்தை பெற்ற திருச்சி எஸ்.ஆர்.எம் ஹோட்டல்



அசோசியேசன் சேம்பா் ஆர் காமர்ஸ் சார்பில் கடந்த மாதம் தென் தமிழகத்தில் உள்ள தங்கும் விடுதிகளுக்கான போட்டியை நடத்தியது.



பல்வேறு பிரிவுகளில் நடத்தப்பட்ட இப்போட்டியில் தென் தமிழகத்தில் இருந்து சுமார் 25 -க்கும் மேற்பட்ட நட்சத்திர விடுதிகள் பங்கேற்றன.

அதில் திருச்சியில் உள்ள எஸ்.ஆர்.எம் குழுமத்தின் நட்சத்திர விடுதி சிறந்த விருந்தோம்பலுக்கான  பரிசையும் - கோப்பையும் பெற்றுள்ளது. இந்தப் போட்டிக்கான இறுதி நிகழ்ச்சியானது டெல்லியில் நடைபெற்றது.


அதில் கலந்து கொண்ட மத்திய அரசின் கலாச்சாரத்துறை அமைச்சர் மகேஷ் சர்மா பல்வேறு பிரிவுகளின் கீழ் வெற்றிபெற்ற நட்சத்திர விடுதிகளுக்கு விருதுகளை வழங்கிக் கவுரவித்தார்.
எஸ்ஆர்எம் கல்வி நிறுவனத்திற்கான விருதை திருச்சி காஜாமலை எஸ்.ஆர்.எம் விடுதி பொது மேலாளர் மாரி ராஜா பெற்று கொண்டார். வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பையும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது.

பேட்டி : மாரி ராஜா - பொது மேலாளர் (எஸ்.ஆர்.எம் விடுதி)

0 comments: