Saturday, February 15, 2020

On Saturday, February 15, 2020 by Tamilnewstv in ,    
திருச்சி பிப் 15

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஓட்டலில் இந்திய குடியரசு கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு தலைவர்
செ.கு. தமிழரசன் தலைமை வகித்தார். முன்னதாக அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், மத்திய, மாநில அரசுகளின் தாக்கல் செய்த பட்ஜெட் ஒன்றோடு ஒன்று சார்ந்து உள்ளது. இரண்டு கருத்துக்களும் ஒரே கருத்தாக அமைந்துள்ளது. ஆனால் இரண்டு பட்ஜெட்களிலும் தலித் சமூக வளர்ச்சிக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வில்லை. இது ஏமாற்றமளிக்கிறது. தலித் மக்களின் நலனில் அக்கறை செலுத்தவில்லை. தலித்களுக்கு என்று மத்திய மாநில அரசுகள் தனி நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். குறைந்தபட்சம் துணை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யவேண்டும். பட்ஜெட்டில் தலித் நலன் சார்ந்த அறிவிப்புகள் இல்லாதது கண்டனத்திற்குரியது. குறிப்பாக தலித்களின் உயர் கல்விக்கு எவ்வித அறிவிப்பும் வெளியாகவில்லை. ஏற்கனவே நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு தான் ஆயிரத்து 900 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரஜினிக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கும், எதிர்பார்ப்பும் உள்ளது. அதனால் தான் அவரது கருத்துக்கள் அரசியல்வாதிகள் மத்தியில் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. இத்தகைய விமர்சனங்கள் ரஜினிக்கு செல்வாக்கு இருக்கிறது என்பதை காட்டுகிறது. ரஜினி கட்சி துவங்கி கொள்கைகளை அறிவித்தால் அவரது கூட்டணி குறித்து வரவேற்போம். இந்திய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்றார்.

0 comments: