Friday, February 14, 2020

On Friday, February 14, 2020 by Tamilnewstv in ,    

பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவரை சந்தித்த விசிக பிரமுகர்கள். காரணம் என்ன ?

மோசடி பேர்வழிகள் டெல்லியில் தஞ்சமா தமிழக காவல்துறைக்கு சவாலா

திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிறுவனம் எல்பின் .
இந்நிறுவனத்தின் இயக்குனர் அழகர்சாமி ( எ ) ராஜா மற்றும் அவரது தம்பி SRK (எ) ரமேஷ் குமார் ஆகிய இருவரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில பதவி வகித்து வருகின்றனர்.
விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்கள் மத்திய அரசின் கொள்கைகளை எதிர்த்து தீவிரமாக அரசியல் செய்து வருபவர் இந்நிலையில் அவரது கட்சியின் மாநில பொறுப்பில் இருக்கும் ராஜா , ரமேஷ் இருவரும் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் துணைச் செயலாளர் ஹெச். ராஜா அவர்களை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து அதைப் புகைப்படமாக எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.

எல்பின்  நிறுவனம் சட்டத்துக்கு புறம்பான வகையில் செயல்பட்டு வருவதாக விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்களுக்கு தெரியவந்ததாலும் மேலும் அழகர்சாமி ( எ ) ராஜாவுக்கு மாவட்ட செயலாளர் பதவி வழங்க தலைவருக்கு அவர்கள் அளித்த கோரிக்கைக்கு அவர் செவி சாய்க்காததால் திருமாவளவன் அவர்கள் மீது அழகர்சாமி என்கிற ராஜா மற்றும் ரமேஷ் ரமேஷ் குமார் சகோதரர்கள் வருத்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. அனைத்தையும் அறிந்தவர் அண்ணன் திருமாவளவன், இவர்களின் தில்லுமுல்லு அவருக்குத் தெரியாதா என உள்ளூர் கட்சியினர் கூறி வருகின்றனர்.


மேலும் மதுரையில் வெடி வியாபாரியிடம்  வெடி வியாபாரம் மோசடியில் ஈடுபட்டனர் பல்வேறு மோசடி வழக்குகள் இவர்கள் மீது தொடர்ந்த வண்ணம் உள்ளது பாதிக்கப்பட்டார்கள் அளித்த புகாரின் பேரில் கைது நடவடிக்கை தமிழக காவல்துறையினரால் நேர்மையான முறையில் நடவடிக்கை எடுத்து தீவிரமாகி வருகிறது என்ற தகவலை மோசடி சகோதரர்கள் தற்போதுகூட  டெல்லியில் பாரதிய ஜனதா கட்சியின்  தலைவர் ஒருவருடன் கைதில் இருந்து  தப்பிப்பதற்கான வழி முறைகளைப் பற்றி பேசி வருவதாக தகவல் .

இந்நிலையில் திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த திருவெங்கடம் யாதவ் அவர்களை இன்று டிஜிபி திரிபாதி அவர்கள் நேரடியாக தொடர்பு கொண்டு பேசி சென்னை வரவைத்து என்பின் நிறுவனம் பற்றி டிஜிபி அலுவலக சட்டம் ஒழுங்கு ஐஜி இடம் நேரடியாக புகார் மனுவினை  வழங்கி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இம்மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக டிஜிபி உறுதி அளித்துள்ளார் என்பது கூடுதல் தகவல்.

தமிழகம் முழுவதும் இவர்கள் மீது ஏராளமான மோசடி வழக்குகள் உள்ளது எல்பின் நிறுவனம் முடக்கப்பட்டு பல ஆண்டு ஆகியும் அதில் பணம் முதலீடு செய்தவர்கள் ஏராளமானோர் உள்ளனர் அதில் பாஜகவை சேர்ந்த சில பிரமுகர்களும் நிறுவனத்தில் பண முதலீடு செய்துள்ளதாகவும் தெரியவருகிறது இந்நிலையில் அரசியலில் நேர்மையாக செயல்பட்டு வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் இவர்களுக்கு சாதகமாக நடக்காததால் இவர்களுடைய மோசடியை மறைக்க மத்தியில் ஆளும்  அரசை நாடி உள்ளனரா இவர்கள் மோசடியில் பொதுமக்கள்  மற்றும் பாஜக பிரமுகர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது முக்கிய குற்றச்சாட்டாக உள்ளது

0 comments: