Friday, February 14, 2020

On Friday, February 14, 2020 by Tamilnewstv in ,    
திருச்சி சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து மகிளா காங்கிரஸ் சார்பில் திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மகிளா காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் ஜெகதீஸ்வரி தலைமை வகித்தார்.


மாநில துணை பொதுச்செயலாளர் ஜெயப்பிரியா முன்னிலை வகித்தார்.
 திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜவகர், தெற்கு மாவட்ட தலைவர் கோவிந்தராஜன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் மகிளா காங்கிரஸ் கட்சியினர் சமையல் எரிவாயு உருளை உடன் போராட்டத்தில் கலந்துகொண்டனர். மத்திய அரசை கண்டித்தும், சமையல் காஸ் விலை உயர்வைக் கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர். இதைத்தொடர்ந்து ஜவகர் செய்தியாளரிடம் பேசுகையில், கடந்த ஆறு ஆண்டுகளாக மத்திய பாஜக அரசு மக்களுக்கு எவ்விதமான

நன்மைகளையும் செய்யவில்லை. சமையல்  விலை உயர்வால் ஏழை எளிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.  செயல்களை சமாளிக்கும் வகையில் குடியுரிமை சட்டத் திருத்தம், காஷ்மீரின் 370 ஆவது சட்டப்பிரிவு நீக்கம், தேசிய குடிமக்கள் பதிவேடு போன்ற மக்கள் விரோத சட்டங்களை கொண்டு வந்து
மத்திய பாஜக அரசு மக்களை திசை திருப்புகிறது.

 இவற்றை கண்டிக்கும் வகையில் தான் மகிளா காங்கிரஸ் சார்பில் தற்போது நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது என்றார்.

0 comments: