Friday, February 14, 2020

On Friday, February 14, 2020 by Tamilnewstv in ,    
திருச்சி

திருச்சி மாவட்ட இறுதி வாக்காளர் வரைவு பட்டியலை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார்.

திருச்சியில் இறுதி வாக்காளர் வரைவு பட்டியலை மாவட்ட ஆட்சியர் சிவராசு  வெளியிட்ட பின்னர் செய்தியாளரகளுக்கு அளித்த பேட்டியில்

 9 சட்டமன்ற தொகுதிகள் அடங்கிய திருச்சி மாவட்டத்தில் மொத்த வாக்காளர்கள் 22 லட்சத்து 97 ஆயிரத்து 106 பேர் உள்ளனர். இதில் ஆண்கள் 11 லட்சத்து 18 ஆயிரத்து 900. பெண்கள் 11 லட்சத்து 77 ஆயிரத்து 997. மூன்றாம் பாலினமாக 209 பேரும் உள்ளனர். அதிக வாக்காளர்கள் உள்ள சட்டமன்ற தொகுதியாக ஸ்ரீரங்கம் விளங்குகிறது. இந்நிலையில் குறைவான வாக்காளர்கள் உள்ள சட்டமன்ற தொகுதியாக லால்குடி இருக்கிறது. புதிதாக 50 ஆயிரத்து 992 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். 1741 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர் என கூறினார்.

0 comments: