Friday, February 14, 2020

On Friday, February 14, 2020 by Tamilnewstv in ,    
திருச்சி 
                  

பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம்.
                

திருச்சி மாவட்ட மதசார்பற்ற ஜனதா தளம் மற்றும் இந்திய மக்கள் நலச் சங்கம் ஆகியவை இணைந்து ஜங்ஷன் அருகில் தமிழகத்தில் பூரண மது விலக்கு அமல்படுத்த வேண்டும், டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்  என்பதை வலியுறுத்தி காலை 
முதல் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் மதசார்பற்ற ஜனதா தள மாவட்ட தலைவர் சிங்காரம் தலைமையில் மக்கள் நலச் சங்கத்தின் சட்ட ஆலோசகர் மார்ட்டின்  முன்னிலையில் 
ஈடுபட்டனர்.

                    

ஆர்ப்பாட்ட உரையை மதசார்பற்ற ஜனதா தளத்தின் மாநில பொதுச்செயலாளர்
ஜான் குமார்,
லோக் தந்திரிக்  ஜனதா தளத்தின் மாநில பொதுச்செயலாளர் ஹேமநாதன். மாநில துணைத் தலைவர் ஆறுமுகம், மற்றும் 
லோக் தந்திரிக்  ஜனதா தளத்தின் நிர்வாகி வையாபுரி உட்பட பலர் வழங்கினார்.

0 comments: