Showing posts with label Trichy rsabarinathan. Show all posts
Showing posts with label Trichy rsabarinathan. Show all posts

Wednesday, February 26, 2020

On Wednesday, February 26, 2020 by Tamilnewstv in ,    
  காவல்துறை அதிரடி நடவடிக்கை தஞ்சாவூரில் மேலும் ஒருவர் கைது

                   

திருச்சி எல்பின் நிறுவன உரிமையாளர்கள் ராஜா என்கிற அழகர்சாமி ரமேஷ் ரமேஷ் குமார் ஆகிய இருவரும் காலையில் டிஜிபி அவர்களை சந்தித்ததாக தகவல் வெளியாகிறது

எதை நோக்கி சந்தித்தார்கள் உள்ளே  என்ன நடந்தது என்று தெரியவில்லை அவர்களுடைய டீம் லீடர் இடையே நாம் இனி கூட்டங்கள் நடத்தலாம் அதில் எந்த பிரச்சனையும் இருக்காது காவல்துறை தலைவர் அவர்களை சந்தித்து உள்ளோம் என்றும் கூட்டம் நடத்த எந்தப் பிரச்சினையும் இருக்காது  என பொய்யானதகவலை பரப்பி வருகிறார்கள்

காவல்துறை திறம்பட செயல்பட்டு வருகிறது அதிலும் தற்போது காவல்துறை தலைவர் பொறுப்பேற்றதில் இருந்து குற்றங்கள் குறைக்கப்பட்டுள்ளது தமிழ்நாடு அமைதியான சூழலில் காணப்படுகிறது
தஞ்சாவூரில் அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு கடந்த 7ஆம் தேதி ஒருவர் கைது செய்யப்பட்ட தற்போது கிங்ஸ்லி என்பவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்

                             

எல்பின் நிறுவன உரிமையாளர் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ் திருச்சியை நோக்கி வந்துள்ளார் தஞ்சாவூரில் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிந்தவர் உடனடியாக திரும்பி சென்றுள்ளார்
திருச்சி வராமல் எங்கு தலைமறைவாக உள்ளனர்
காலையில் டிஜிபி யை சந்தித்து வந்தார்கள் ஆனால் தற்போது அழகர்சாமி என்கிற ராஜா ரமேஷ் என்கிற ரமேஷ் குமார் எங்கே சென்றனர் வெளிநாடு ஏதும் சென்று விட்டார்களா என்று தெரியவில்லை காவல் துறையைப் பற்றி
பொய்யான தகவல்களை பரப்பி வருவதே இவர்களுடைய வேலையாக இருக்கிறது
தமிழக காவல்துறை திறம்பட செயல்பட்டு தெளிவாக வருகிறது
வழக்குப்பதிவு செய்து திறம்பட செயல்பட்டு வருகிறார்கள் தஞ்சாவூர் காவல் அதிகாரிகள் மேலும் எல்பின் நிறுவன உரிமையாளர்கள் தற்போது திரைப்படம் எடுத்ததாக தகவல்கள் வெளிவருகிறது இவர்களுக்கு  எதுஇந்த பணம் எங்கிருந்து இருக்க பணம் வருகிறது
கோடிக்கணக்கில் செலவு செய்து கூட்டங்கள் நடைபெறுகிறது இவர்களுக்கு பணம் எப்படி கிடைக்கிறது ஏதேனும் வெளிநாட்டு பணம் வருகிறதா என்று ஒன்னும் புரியவில்லைஇவை அனைத்தும் காவல்துறை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள் வெகுவிரைவில் நீதியின் பிடியில் சிக்குவார்கள்

....................................................................................

பின்குறிப்பு :-

 *ELFIN நிதி நிறுவன சகோதரர்கள் பல அடியாட்கள் மற்றும் கொலை சம்பவங்களில் ஈடுபட்டுள்ள நபர்களுக்கு மாதாமாதம் பணம் கொடுத்து உதவி வருவதாகவும் தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் எல்பின்  நிறுவனத்திற்கு எதிராக செய்தி வெளியிடுவோர்  மீதும் அதற்கு உறுதுணையாக இருக்கும் நபர்கள் மீதும் ராமஜெயம் கொலை வழக்கு போன்று ஆகிவிடும் என்று அவர்கள் சுற்றுவட்டாரத்தில் கூறி வருவதாக தெரிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.*


 *தொடர்ச்சியாக ELFIN செய்தி வெளியிட்டதால் மர்ம நபர்களால் ( சபரிநாதன் என்ற நான் )தாக்கப்பட்டேன் ஆனால் இதுநாள் வரை காவல்துறை அதிகாரிகள் தாக்கிய மர்ம நபர்களை கைது செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது பொதுநலன் கருதி செய்தி வெளியிடுவோர் மீது இப்படி தாக்குதல் நடத்தினால் மக்களின் நிலை என்ன ஆவது*

On Wednesday, February 26, 2020 by Tamilnewstv in ,    
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகேயுள்ள பெரகம்பி பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (36), இவரது மனைவி லதா (33). இருவருக்கும் 2014ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அதே பகுதியில் வீடு கட்டி வசித்துவந்தனர். இந்நிலையில் 2018 ஏப்ரல் 24ஆம் தேதியன்று அதிகாலை கணவன் மனைவி இருவரும் வீட்டின் வாசலில் கயிற்றுக் கட்டிலில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர்.


அப்போது அடையாளம் தெரியாத நபர்கள், கணவன் மனைவி இருவரையும் பயங்கர ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். இதில் லதா ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உயிருக்குப் போராடிய ரமேஷை அக்கம்பக்கத்தினர் மீட்டு தஞ்சை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கே ரமேஷ் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து சிறுகனூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர். மேலும் கொலைசெய்யப்பட்ட அன்று வீட்டிலிருந்த 7 பவுன் நகை, 3,000 ரூபாய் பணம், ஒரு இருசக்கர வாகனமும் திருடு போயிருந்தது விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக காவல் துறையினர் தனிப்படை அமைத்து கொலையாளிகளைத் தீவிரமாகத் தேடிவந்தனர்.

சில தினங்களுக்கு முன்பு திருடுபோன ரமேஷின் இருசக்கர வாகனம், சிறுகனூர் அருகே வேப்பூர் என்ற இடத்தில் விபத்தில் சிக்கியது. ஓட்டிவந்த பழனிச்சாமி என்பவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார்.

தகவலறிந்த சிறுகனூர் காவல் துறையினர், பழனிச்சாமியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது பழனிச்சாமியும் அவரது நண்பரான பெரம்பலூர் சத்திரமணி பகுதியைச் சேர்ந்த கிஷாந்த் (21) ஆகிய இருவரும் சேர்ந்து ரமேஷ் - லதா தம்பதியை பயங்கர ஆயுதங்களால் வெட்டிக் கொலைசெய்தது

ரமேஷ் வைத்திருந்த இருசக்கர வாகனத்தின் மீது கொண்ட ஆசை காரணமாக இந்தக் கொலை சம்பவத்தில் ஈடுபட்டதாக இருவரும் ஒப்புக்கொண்டனர். இருவரும் பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பயின்றுவந்தனர். இதையடுத்து காவல் துறையினர் இருவரையும் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கொலை வழக்கு விசாரணையை முடித்த சிறுகனூர் காவல் துறையினரை, திருச்சி காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் இன்று பாராட்டி கௌரவித்தார்

Sunday, February 23, 2020

On Sunday, February 23, 2020 by Tamilnewstv in ,    
திருச்சி
                   

என்.ஆர்.சி குறித்து பிரதமரும்,உள்துறை அமைச்சரும் மாறுபட்ட கருத்துகள் கூறுவது இருவரும் சேர்ந்து நடத்தும் நாடகம் - விடுதலை சிறுத்தைகள்  கட்சித் தலைவர்  எழுச்சித்தமிழர்  சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் தோல் .திருமாவளவன் பேட்டி


திருச்சியில் வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்,

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும் என்.ஆர்.சி,என்.பி.ஆர் ஆகியவற்றை செயல்படுத்த கூடாது என வலியுறுத்தியும் வி.சி.க சார்பில் தேசம் காப்போம் பேரணி இன்று திருச்சியில் நடைபெற உள்ளது.

இந்த சட்டம் இந்தியா முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டால் எட்டு கோடி பேர் நாடற்றவர்களாக மாறும் நிலை உருவாகும்.26558 தடுப்பு முகாம்கள் கட்ட இருக்கிறார்கள்.இதற்கு 12 லட்சம் கோடி ரூபாய் செலவு செய்ய நேரிடும் என கணகிடப்பட்டுள்ளது.இது இந்தியாவின் பொருளாதராத்தை பாதிக்கும்.
மத்திய மாநில அரசுகள் தங்கள் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இல்லையென்றால் நாடு இருள்மயமாகி விடும்.

இந்த சட்டத்தால் முஸ்லீம்கள் மட்டும் தான் பாதிக்கப்படுவார்கள் என நம்பினால் அது மிகப்பெரிய மூட நம்பிக்கை.

என்.ஆர்.சி குறித்து பிரதமரும்,உள்துறை அமைச்சரும் மாறுபட்ட கருத்துகள் கூறுவது இருவரும் சேர்ந்து நடத்தும் நாடகம்.
நாட்டு மக்களை திசை திருப்பி ஏமாற்றும் முயற்சியில் அவர்கள் 
ஈடுபட கூடாது.பொருளாதார வீழ்ச்சியை சரி செய்யாமல் மதத்தின் பெயரால் மக்களை பிரிப்பது அரசியலமைப்பு சட்டத்தை சிதைக்கும் நடவடிக்கை.

அரசியலமைப்பு சட்டத்தை வலுவிழக்க செய்து அதை சிதைப்பது சங்பரிவாரிகளின் நீண்ட நாள் கனவு.

முதலமைச்சர் தன் நிலைப்பாட்டை நியாயப்படுத்த விரும்புகிறார்.ஆளும் பா.ஜ.க வின் பாவசெயலுக்கு முட்டு கொடுக்கும் நிலையில் இருக்கிறார்கள்.கூட்டணி தர்மத்திற்காக பா.ஜ.க செய்யும் பாவ செயலுக்கு அ.தி.மு.க,பா.ம.க உள்ளிட்ட கட்சிகள் துணை போகிறது.

ஒ.பி.சி பிரிவினருக்கான இட ஒதுக்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பிற்கு எதிராக வி.சி.க சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய உள்ளோம்.

தாழ்த்தப்பட்ட சமூகங்களை நீதிபதிகளாக நியமித்தது குறித்து ஆர்.எஸ்.பாரதியின் பேச்சு வருத்தமும்,அதிர்ச்சியும்,வலியையும்அளிக்கிறது. அவர் தன் வருத்தத்தை தெரிவித்துக் கொண்டதால் மேலும் அது குறித்து பேச தேவையில்லை என்றார்.

Friday, February 14, 2020

On Friday, February 14, 2020 by Tamilnewstv in ,    
திருச்சி 
                  

பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம்.
                

திருச்சி மாவட்ட மதசார்பற்ற ஜனதா தளம் மற்றும் இந்திய மக்கள் நலச் சங்கம் ஆகியவை இணைந்து ஜங்ஷன் அருகில் தமிழகத்தில் பூரண மது விலக்கு அமல்படுத்த வேண்டும், டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்  என்பதை வலியுறுத்தி காலை 
முதல் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் மதசார்பற்ற ஜனதா தள மாவட்ட தலைவர் சிங்காரம் தலைமையில் மக்கள் நலச் சங்கத்தின் சட்ட ஆலோசகர் மார்ட்டின்  முன்னிலையில் 
ஈடுபட்டனர்.

                    

ஆர்ப்பாட்ட உரையை மதசார்பற்ற ஜனதா தளத்தின் மாநில பொதுச்செயலாளர்
ஜான் குமார்,
லோக் தந்திரிக்  ஜனதா தளத்தின் மாநில பொதுச்செயலாளர் ஹேமநாதன். மாநில துணைத் தலைவர் ஆறுமுகம், மற்றும் 
லோக் தந்திரிக்  ஜனதா தளத்தின் நிர்வாகி வையாபுரி உட்பட பலர் வழங்கினார்.

Sunday, January 05, 2020

On Sunday, January 05, 2020 by Tamilnewstv in ,    
திருச்சி

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா பகல்பத்து உற்சவம் நிறைவு நாளான இன்று 5ஆம் தேதி நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி காட்சி அளிக்கிறார்


 நாளை ஆறாம் தேதி அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு விழா நடக்க இருக்கிறது 108 வைணவத் திருத்தலங்களில் முதன்மையான பூலோக வைகுண்டம் என சிறப்புக்குரியது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயம் ஆகும் ஆண்டுதோறும் மார்கழி மாதம் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி விழாவில் உள்ளூர் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் தெய்வ தரிசனம் செய்ய வருகிறார்கள் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த டிசம்பர் 26 ஆம் தேதி திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் தொடங்கியது அதன் பின் பகல்பத்து உற்சவம் கடந்த 27ஆம் தேதி துவங்கியது பகல் பத்து உற்சவத்தின் பத்து நாள் ஆகி நிறைவு இன்று 5ஆம் தேதி நம்பெருமாள் மோகினி அலங்காரம் எனப்படும் நாச்சியார் திருக்கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார் பக்தர்கள் மோட்சம் அடைய விரும்பினால் மண்ணாசை பொன்னாசை பெண்ணாசை போன்ற ஆசைகளைத் துறக்க வேண்டும் ஆசைகளை கொடூரமான ஆசை பெண்ணாசை எனவே பெண்ணாசையை கைவிட்டு பிறந்தவர்கள் தான் மோட்சத்தை அடையலாம் என்ற தத்துவத்தை உணர்த்தும் வகையில் நம்மால் இன்று 5ஆம் தேதி மோகினி அலங்காரத்தில் அழகிய பெண் வேடத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு முன்பு காட்சியளிக்கிறார் மோகினி அலங்காரம் இன்று நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து மோகினி அலங்காரத்தில் காலை 6 மணிக்கு புறப்பட்டு பகல்பத்து உற்சவம் அண்ட் அர்ஜுன மண்டபத்திற்கு 7 மணிக்கு வந்து சேருகிறார் 7 மணி முதல் 7 மணி வரை திரை அதன்பின் ஏழரை மணி முதல் 11 மணி வரை அரையர் சேவை மற்றும் பொது பொதுஜன சேவையுடன் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார் அதன் பின் இரண்டாவது அரையர் திருமொழியில் விருந்து ராவண வதம் நிகழ்ச்சி போது ஜன சேவையுடன் காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறுகிறது தொடர்ந்து இரண்டரை மணி முதல் 3 மணி வரை வெள்ளி சம்பா அமுது செய்ய திரை அதன்பின் உபயகாரர் மரியாதையுடன் பக்தர்கள் தரிசனம் மாலை நாலு மணி வரை நடைபெறுகிறது அதனைத் தொடர்ந்து 4 மணி முதல் நாலரை மணிவரை பொது சேவை நடக்கிறது அதன் பின் நம்பர் மாலை 5 மணிக்கு பகல்பத்து அர்ஜுன மண்டபத்தில் இருந்து புறப்பட்டு மாலை 5 மணிக்கு ஆரிய படல் வாசல் வந்து சேருகிறார் அதன்பின் அங்கிருந்து திருக்கொட்டாரம் பிரகாரம் வழியாக வலம் வந்து கருட மண்டபத்திற்கு இரவு 7 மணிக்கு வந்து சேருகிறார் அங்கு ஆழ்வார்கள் ஆச்சாரியார்கள் மரியாதை செய்த பின்னர் இரவு 8 மணிக்கு கருட மண்டபத்தில் இருந்து புறப்பட்டு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார் இன்று மூலவர் முத்தங்கி சேவை காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை அதன் பின் மூலஸ்தான சேவை கிடையாது நாளை 6 ஆம் தேதி அதிகாலை பரமபதவாசல் திறப்பு விழா நடைபெறுகிறது விழா ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் கோவில் அறங்காவலர் குழு தலைவர் வேணு சீனிவாசன் இணை ஆணையர் ஜெயராமன் சுந்தர் பட்டர் பட்டர் கோவில் அலுவலர்கள் பணியாளர்கள் செய்துள்ளனர்
On Sunday, January 05, 2020 by Tamilnewstv in ,    
திருச்சி விவசாயிகள் ரத்தக் கண்ணீர் வடிப்பது போல் நூதன போராட்டம்

திருச்சி  விவசாயிகளின் வாக்குறுதியை நிறைவேற்றாததால் திருச்சி விவசாயிகள் நேற்று இரண்டாவது நாளாக உண்ணாவிரதம் இருந்தனர் அப்போது ரத்தக் கண்ணீர் வடிப்பது போல் கண்களில் சிவப்பு சாயம் பூசி கடந்த 2014 ஆம் ஆண்டு வறட்சியால் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் அனைத்து விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் நகை ஏலம் ஜப்தி நடவடிக்கையை நிறுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் கத்தினர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து மனு அளிக்க முடிவு செய்தனர் ஆனால் முதல்வரை சந்திக்க அனுமதி கிடைக்கவில்லை எனவே முதல்வரை சந்திக்க அனுமதி பெற்றுத் தராத மாவட்ட நிர்வாகத்தின் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஜங்ஷன்  அருகே தொடர் உண்ணாவிரதம் ஆக ஏழு நாள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது அதன்படி கடந்த 3ஆம் தேதி முதல் உண்ணாவிரதம் தொடங்கியது நேற்று முன்தினம் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு மற்றும் விவசாயிகளிடம் மாவட்ட ஆட்சியர் சிவராசு பேச்சுவார்த்தை நடத்தினர்

 அப்போது முதல்வரை சந்திக்க ஏற்பாடு செய்து தருவதாகவும் போராட்டத்தை கைவிடுங்கள் என்று மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார் அதனால் இரண்டாவது நாள் உண்ணாவிரதம் கைவிடப்பட்டது இந்நிலையில் வேளாண்துறை அமைச்சர் மற்றும் வேளாண்துறை செயலாளரை சந்திக்க ஏற்பாடு செய்கிறோம் என்று மாவட்ட ஆட்சியர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது இப்படி மாற்று பேச்சு  ஏற்காத விவசாயிகள் அய்யாக்கண்ணு தலைமையில் அதே இடத்தில் நேற்று இரண்டாவது நாளாக உண்ணாவிரதம் நடத்தினர் போராட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் நெற்றியில் பட்டை நாமம் கண்களிலிருந்து ரத்தக் கண்ணீர் வருவது போல் சிவப்பு நிறத்தில் கோடு வரைந்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்

Thursday, January 02, 2020

On Thursday, January 02, 2020 by Tamilnewstv in ,    
விவசாயிகள் நாமம் போட்டு தொடர் உண்ணாவிரதம்


திருச்சியில்
கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் நாமம் போட்டு தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    140 ஆண்டுகள் வரலாறு காணாத  வறட்சியை தமிழகம் கடந்த 2016ஆம் ஆண்டு கண்டது,  2016ஆம் ஆண்டு ஏற்பட்ட கடுமையான வறட்சியின் காரணமாக தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளுக்கு இன்னும் நஷ்டஈடு வழங்காததை வழங்க கோரியும்,  உச்ச நீதிமன்றமே அனைத்து விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய யோசியுங்கள் என்று கூறியும்,  தள்ளுபடி செய்ய மறுக்க கூடாது என்று கோரியும்,  தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய கோரியும்,  நகை ஏலம்  ஜப்தி நடவடிக்கையை நிறுத்திட கோரியும்,  வெங்காயத்தை விவசாயிகளிடம் அரசே நியாமான விலையில் கொள்முதல் செய்து குறைவான விலையில் மக்களுக்கு கொடுக்க கோரியும்,  காவிரியில்  வரும் வெள்ளநீரை 30 ஆண்டுகளுக்கு முன்பே மேட்டூர் - அய்யாறு - உப்பாறு இணைப்பு திட்டம், காவிரி - குண்டாறு - வைகை இணைப்பு  திட்டம் அறிவித்ததை நிறைவேற்ற கோரியும்,  கோதாவரி - காவிரி இணைப்பு திட்டத்திற்கு நிதி ஒதுக்க மத்திய அரசை வலியுறுத்த கோரியும்,  இடுக்கி மாவட்டத்தை கேரளாவில் இருந்து எடுத்து தமிழகத்துடன் இணைத்து முல்லைபெரியார் பிரச்சனை,  58ம் கால்வாயில் வருடம் முழுவதும் தண்ணீர் கிடைக்க கோரியும்,  ஆலடியாறு டேமில் துளையிட்டு கீழ்கூடலூர், கம்பம்,  உத்தமபாளையம்,  போடி,  தேனி,  பெரியகுளம், மஞ்சள் ஆற்றை தாண்டி தேவன்கோட்டை வெள்ளோடு,  திண்டுக்கல் எரியோடு கடவூர் வழியாக திருச்சி வையம்பட்டி பொன்னனையாறு டேமில் இணைக்க கோரியும்,  தமிழக எல்லையில் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழைநீரை வீணாக அரபிக்கடலில் கலக்காமல் தடுப்பதும், ஊட்டியில் பெய்யும் மழைநீரை மாயாறு வழியாக கர்நாடகத்திற்கு செல்லாமல் பவானி டேம்-க்கு திருப்பி விட கோரியும்,  10 ஆண்டுகள் முன்பு குடும்ப கட்டுப்பாடு பிரச்சாரம் செய்த அரசு தற்பொழுது இலாபகரமான விலையை விவசாயிகளுக்கு கொடுக்காமல்,  விவசாயிகளை விவசாயத்தை விரட்டிவிட்டு மரபணு மாற்றப்பட்ட விதைகளை கொண்டு 1 மடங்கு விளைச்சலுக்கு பதில் 5 மடங்கு உற்பத்தியாகும் மரபணு மாற்றப்பட்ட உணவை உற்பத்தி செய்து இளைஞர்களுக்கு கொடுத்து ஆண்மை இழக்கவும்,  பெண்கள் குழந்தை பெற முடியாமல் செய்யும் மரபணு மாற்றப்பட்ட விதை உணவை இறக்குமதி செய்வதை தடுக்க கோரியும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் உண்ணாவிரதம் இன்று தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு  தலைமையில் விவசாயிகள்
 *திருச்சி ஜங்சன் *விவசாயிகள் உடையில் 02.01.2020 முதல் 08.01.2020 வரை 7 நாட்கள் (காலை 8 மணி முதல் இரவு 6 மணி வரை) தொடர் உண்ணாவிரதம்* இன்று நாமம் அணிந்துகொண்டு துவங்கியுள்ளனர்.

Sunday, December 29, 2019

On Sunday, December 29, 2019 by Tamilnewstv in ,    
திருச்சி  இரண்டாம் கட்டஉள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்தது

திருச்சியில் வரும் 30 12 2019 அன்று இரண்டாம் கட்டம் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது அதற்காக பல்வேறு கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் தங்களுடைய பிரச்சாரத்தை 28 12 2019 அன்று மாலை 5 மணி அளவில் பிரச்சாரத்தினை முடிவு செய்தனர்


திருச்சி அதிமுக வேட்பாளர் ஜெயக்குமார் மற்றும் கூட்டணிக் கட்சியான பாமக வேட்பாளர் நம்பர் ஒன் டோல்கேட் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில்  பிரச்சாரம் செய்தனர் 

 மாதவப்பெருமாள் கோயில் ஊராட்சி மன்ற தலைவருக்கு போட்டியிடும் கை உருளை சின்னத்தின் வேட்பாளர் செல்வம் பிரச்சாரம் செய்தார் பூனம் பாளையம் ஊராட்சி மன்ற ஒன்றியம் 12வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் திமுக சசிகலா குமார் பிரச்சாரம் செய்தார் சுயேட்சை வேட்பாளர் ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிக்கு போட்டியிடும் தனக்கோடி பிரச்சாரம் செய்தார் மணச்சநல்லூர் ஊராட்சி வார்டு எண் 6 ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் திமுக வேட்பாளர் நித்தியா வெற்றிச்செல்வன் பிரச்சாரம் செய்தார் திருச்சி மாவட்டம் எட்டாவது வார்டு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் மதிமுக வேட்பாளர் டிடிசி சேரன் பிரச்சாரம் செய்தார் சா அய்யம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் பொறுப்பிற்கு போட்டியிடும் பழனியம்மாள் பிரச்சாரம் செய்தார் மணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியம் அய்யம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு தேவி சிங்காரம் பிரச்சாரம் செய்தார் மண்ணச்சநல்லூர் ஒன்றியம் பிச்சாண்டார்கோவில் ஊராட்சி வார்டு எண் 21 பதவிக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர் வெற்றிச்செல்வி தர்மலிங்கம் பிரச்சாரம் செய்தார் பிச்சாண்டார் கோவில் ஊராட்சி பீரங்கி மேடு தெரு 13வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் மாலா சீனிவாசன் பிரச்சாரம் செய்தார் திமுக வேட்பாளர்  மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியம் வார்டு எண் 22 பிச்சாண்டார் கோயில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் அம்பிகாபதி பிரச்சாரம் செய்தார் பிச்சாண்டார் கோயில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் ஷோபனா தங்கமணி ஆகியோர் பிரச்சாரம் செய்தனர்

Wednesday, December 18, 2019

On Wednesday, December 18, 2019 by Tamilnewstv in ,    
திருச்சியில் மே மாதம் சர்வதேச சிலம்ப போட்டி

திருச்சி கி.ஆ.பெ.விசுவநாதம் உயர்நிலை பள்ளியில்   வருகின்ற மே மாதம் சர்வதேச அளவிலான சிலம்ப போட்டி நடைபெற உள்ளது.

பள்ளியில் நடைபெற்ற கூட்டத்தில் கி.ஆ.பெ.பள்ளி தலைவர் டாக்டர். வி.ஜெயபால், தேசிய கல்லூரி பேராசிரியர்  டாக்டர் மாணிக்கம், சுருளி ஆண்டவர் தற்காப்பு கலைகூட தலைவர் இரா.மோகன், துணை தலைவர். எஸ்.சிவா, கோபாலகிருஷ்ணன், கணேஷ், அரவிந்த், மலேசியா மற்றும் சிங்கப்பூர் சிலம்ப ஆசான்கள், சிலம்ப மாணவர்கள் மற்றும் சிலம்ப பயிற்சியாளர்கள் பங்கேற்றனர்

இன்று 18.12.2019 புதன்கிழமை பள்ளியில் நடைபெற்ற கூட்டத்தில் மலேசியாவில் இருந்து வருகை பங்கேற்ற மலேசிய சிலம்ப கோர்வை மற்றும் சிங்கப்பூர் சிலம்ப கோர்வை கழக கு.அன்பழகன் கூறுகையில் நான் மலேசியா மற்றும் சிங்கபூரில் சிலம்ப பள்ளி வைத்துள்ளேன்  அங்கு பல மாணவர்களுக்கு சிலம்பம் கற்று கொடுக்கிறேன் மேலும் டிசம்பர் 01 ம் தேதியன்று சிங்கபூரில் சிலம்ப போட்டி நடத்தினேன் அதில் சிங்கப்பூர், மலேசியா மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் இருந்து 160 க்கும் மேற்பட்ட மாணவர்கள் போட்டியில் பங்கேற்றனர் தற்பொழுது தமிழகத்தில் அதுவும் திருச்சியில் தமிழர் பாரம்பரிய கொடுக்பட்டு சிலம்பத்தில் சர்வதேச போட்டி நடைபெற இருக்கின்றது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கின்றது.

இந்த போட்டியில் நானும் என்னுடைய 30 க்கும் மேற்பட்ட சிங்கப்பூர் மற்றும் மலேசிய மாணவர்களுடன் கலந்து கொள்ள இருக்கின்றோம் என கூறினார்.

இந்த கூட்டத்தில் மே மாதம் நடைபெற இருக்கும் போட்டிக்கான குழுவினர் தேர்ந்தெடுக்கப்பட்டனர் தலைவராக டாக்டர். ஜெயபால், துணை தலைவராக டாக்டர். வி.ஜே.செந்தில், சிங்கப்பூர் தமிழ் மகன் (எ) கண்ணன், மலேசிய மாஸ்டர் அன்பழகன் ஆகியோரும் செயலாளராக எஸ்.சிவா ஆகியோரும் இணை செயலாளராக சிங்கப்பூர் மருதீஸ்வரன் மற்றும் திருச்சி சிலம்ப மாஸ்டர் ஜெயக்குமார் ஆகியோரும் ஒருங்கிணைப்பாளராக இரா.மோகன் ஆகியோர் தேர்தெடுக்கப்பட்டனர்.

இந்த நிகழ்ச்சியில் சிங்கப்பூரில் நடைபெற சிலம்ப போட்டியில் பங்கு பெற்று தங்கம் பெற்ற அரவிந்த் மற்றும் சுகித்தாவிற்கு பாராட்டி சான்றிதழ் வழங்க பட்டு இளம் வீராங்கனையான சுகித்தாவிற்கு தங்க மீன் பரிசாக கொடுக்பட்டு சிலம்ப சாதனை நாயகி பட்டமும் வழங்கபட்டு சுகித்தாவின் பயிற்சியாளர் அரவிந்தையும் பாராட்டினார்.

நிகழ்ச்சியில் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் சுந்தரேசன், உடற்கல்வி ஆசிரியர் முத்துகுமார், பிரியா மற்றும் பாலா மலேசியாவில் இருந்து 10 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

Sunday, September 30, 2018

On Sunday, September 30, 2018 by Tamilnewstv in ,    
*திருச்சி சமயபுரம் அருகே ஏற்பட்ட கார் விபத்தில் 8 பேர் உயிரிழப்பு*


   
திருச்சி சமயபுரம் அருகே சுங்கச்சாவடி யில் சாலையோரத்தில் நின்றிருந்த இரும்பு ஏற்றி வந்த லாரி மீது சென்னையிலிருந்து திருச்சி நோக்கி வந்த   கார் லாரி மீது மோதிய விபத்தில் காரில் பயணித்த 13 பேரில் , 8 பேர் உயிரிழந்தனர். 5 பேர் படுகாயமடைந்தனர்.



திருச்சி மாவட்டம், சமயபுரம் சுங்கச்சாவடி அருகே சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற கார் சமயபுரம் சுங்கச்சாவடி அருகே தேசிய நெடுஞ்சாலையின் ஓரம் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. அதிகாலையில் நிகழ்ந்த இந்த கோர விபத்தில் 2 குழந்தைகள், 3 பெண்கள் ம ற்றும் 3 ஆண்கள் உள்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.

       
        சென்னை மேடவாக்கம் விஜய், மஞ்சுநாதன் கந்த சாமி, பாலமுருகன் சுப்ரமணி, ஜெயலட்சுமி, பாக்கி லட்சுமி, கவிதா உட்பட 13பேர் பேட்ட வாய்த் தலை அருகே வீடு வாங்கியதை ஸ்கார்ப்பியோ காரில் பார்க்க வந்தனர். 22 டன் எடையுள்ள இரும்பு லோடு ஏற்றிக் கொண்டு ஆந்திர மாநிலம் நெல்லுரில் இருந்து வந்த லாரி, திருச்சி சமயபுரம் அருகே நெம்பர் 1 டோல்கேட் பகுதியில் இரும்பு லோடுடன் நின்று கொண்டிருந்தது.
மேடவாக்கத்தில் இருந்து வந்த கார், அதிகாலை 4.15 மணிக்கு மோதி விபத்துக்குள்ளானது.
சுமார் மூன்றரை மணி நேரம் மீட்பு பணி நடந்தது.
விபத்தில் 3 ஆண், 3 பெண்கள்,  2 குழந்தைகள் உட்பட 8 பேர் பலியாகி உள்ளனர்.
இந்த டோல்கேட் பகுதியில் இரவு நேரத்தில் விளக்குகள் எரிவதில்லை. மேலும், அதே பகுதியில் போலீஸ் அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் சோதனை நடத்துவதால் தான் லோடு வாகனங்கள் இந்த இடத்தில் நிறுத்தப்படுகின்றன. அதனால் தான் அடிக்கடி விபத்துக்கள் நடக்கிறது. என்பது இப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு .
கார் ஒட்டி வந்தவர் தூக்க கலக்கத்தில் வந்ததால் தான் விபத்து நிகழ்ந்த தாகவும் கூறப்படுகிறது.
 பரிதாபமாக உயிரிழந்தனர்.

Saturday, September 29, 2018

On Saturday, September 29, 2018 by Tamilnewstv in ,    



தேசிய அளவிலான தகுதி போட்டிக்குஅண்ணா பல்கலைக்கழக மண்டலங்களுக்கிடையேயானசதுரங்க
போட்டி.



கல்லூரி மாணவ மாணவிகள் 300பேர் பங்கேற்பு



      திருச்சி மாவட்டம்  சமயபுரம்அருகே தனலட்சுமி சீனிவாசன்தொழில்நுட்ப பொறியியல்கல்லூரியில் அண்ணாபல்கலைக்கழகம் சார்பில் தேசியஅளவிலான போட்டியில் பங்குபெறுவதற்காகமண்டலங்களுக்கிடையேயானசதுரங்க போட்டி நடைபெறுகிறது.










     
 இப்போட்டியில் திருச்சி, தஞ்சாவூர்,அரியலூர், பெரம்பலூர் என தமிழகம்முழுவதும் உள்ள  பல்வேறுகல்லூரிகளிலிருந்து ஆண்கள்பிரிவில் 18 அணிகளும், பெண்கள்பிரிவில் 19 அணிகளும் பங்கேற்றன. 5 சுற்றுகளாக நடைபெறும். சேலம்மற்றும் திருச்சி சதுரங்க சங்கத்தைச்சேர்ந்த 5 பேர் நடுவர்களாக செயல்பட்டனர்.இப்போட்டியில்வெற்றி பெறும்மாணவ,மாணவிகளுக்குபரிசுகளும், சான்றிதழ்களும்வழங்கப்படுகிறது.



இப்போட்டியில் வெற்றிபெறுபவர்கள் நாளை தனிப்பிரிவில்பங்கு பெறுவார்கள். அதில் வெற்றிபெறுபவர்கள் தேசிய அளவிலானபோட்டிகளில் பங்கு பெறுவதற்குதகுதி பெறுவார்கள் என்பதுகுறிப்பிடதக்கது..

Wednesday, September 26, 2018

On Wednesday, September 26, 2018 by Tamilnewstv in ,    
அகில இந்திய முகம்,  தாடை அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கம் சார்பில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி இன்று செப்டம்பர் 26 புதன்கிழமை காலை 6 மணிக்கு திருச்சியில் நடைபெற்றது.



திருச்சி உழவர்சந்தை மைதானத்தில் இருந்து புறப்பட்ட இந்த விழிப்பணர்வு நிகழ்ச்சி தென்னூர் உக்கிரமாகாளியம்மன் கோவில், கோர்ட் எம்.ஜி.ஆர் சிலை வழியாக மீண்டும் ஆரம்ப இடத்திற்கு வந்தனர்.


இதில்
தலைக்கவசம் அணிந்து கொள்ளாமலும்,  செல்லிடப்பேசியைப் பயன்படுத்தி இருசக்கர வாகனம் ஓட்டுவதாலும் ஏற்படும் விபத்துகளால் முகத்தில் எலும்பு முறிவு மற்றும் உயிரிழப்பு ஏற்படுகிறது.  இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் சாலை விபத்துகள் அதிகம் நடப்பதாக ஆய்வறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது.
இந்த விபத்துகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், புகையிலை மற்றும் போதைப்பொருள்களைப் பயன்படுத்துவதால் வாய் புற்றுநோய் நோய் ஏற்பட்டு. முகம் பாதிக்கப்படுவது குறித்தும்,  பிறவிக் குறைபாடு காரணமாக முகத்தில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவற்றைக் உயர்தர நவீன சிகிச்சை முறைகளால் சீரமைக்க முடியும் என்ற விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் வகையிலும் இந்த மாரத்தான் போட்டி நடைபெற்றது. தமிழ்நாட்டில்  திருச்சி தவிர திருநெல்வேலி,  மதுரை,  கன்னியாகுமரி, கோயம்புத்தூர், சேலம், சென்னை மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் இது போன்ற விழிப்புணர்வு மாரத்தான் போட்டி இம்மாதம் நடைபெற்றது.



மேலும் அடுத்த அக்டோபர் 11-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் அகில இந்திய முக சீரமைப்பு நிபுணர்கள் கருத்தரங்கு நடைபெற உள்ளது. இந்த கருத்தரங்கை இந்திய குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யநாயுடு தொடங்கி வைக்கிறார்.
 கன்னியாகுமரியில் தொடங்கிய மாரத்தான் போட்டியை தமிழ்நாடு முக சீரமைப்பு நிபுணர்கள் சங்கத் தலைவர் டாக்டர் எம்.வீரபாகு தொடங்கிவைத்தார்.
.


திருச்சியில் நடைபெற்ற மராத்தான் ஓட்டத்தில் சுமார் ஐந்நூறுக்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மற்றும் திருச்சியில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் இருந்த பணியாளர்கள்  கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியை திருச்சி வாய் நோய் , முக , தாடை அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கம் ஏற்பாடு செய்து இருந்தனர்.

Saturday, September 22, 2018

On Saturday, September 22, 2018 by Tamilnewstv in    
திருச்சி_22.09.18

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற சம்பவங்கள் வருந்தத்தக்க வகையில் உள்ளது என்று உச்ச நீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி கவலை தெரிவித்தார்

திருச்சி நவலுர் குட்டப்பட்டுவிலுள்ள தமிழ்நாடு தேசிய சட்டப்பள்ளியில் சர்வதேச மாநாடு நடைபெற்றது.  பாலின சமத்துவத்தில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில், இந்தியா, இங்கிலாந்து, ஜெர்மன், மெக்சிகோ நாடுகளை சேர்ந்த பேராசிரியர்கள், தேர்தெடுக்கப்பட்ட மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.





இந்த சர்வதேச மாநாட்டில் கலந்து கொண்ட உச்சநீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி பேசும்போது......

நமது இந்திய அரசியல் அமைப்பு சட்டமானது, பெண்கள் முன்னேற்றத்திற்கான பல அம்சங்களை கொண்டுள்ளது. அவர்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்கான சட்டங்களோடு, பெண்களை சமுதாயத்தில் முன்னேற்றி விடுவதற்கான பல அம்சங்களை கொண்டுள்ளது. சமத்துவத்தில் முன்னோடி மாநிலமான தமிழகத்திலும் கூட பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்து வெளியாகும் செய்திகள் வருந்தத்தக்க வகையில் உள்ளது. அதே சமயம் தமிழகத்தின் சென்னை உயர்நீதிமன்றத்தில் தான் மொத்தம் உள்ள 62 நீதிபதிகளில் 12 பேர் பெண்களாக கடந்த ஆண்டு இருந்து வந்தனர்.

நான் அந்த நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த போது, இந்த சிறப்பு நிலவியது. ஆனால் இதுவும் கூட ஐந்தில் ஒரு பங்கிற்கும் குறைவானதாகும். இந்திய நீதித்துறையின் உயர் பதவியில்  பெண்கள் அதிகளவில் வரவேண்டும். இந்திய அரசியல் சட்டம் உருவாக்கப்பட்ட பிறகு, உச்ச நீதிமன்றத்தில் ஒரே நேரத்தில் 3 பெண்கள் நீதிபதிகளாக பதவி ஏற்றது இதுவே முதல்முறையாக உள்ளது. நாட்டில் இயற்கை வளங்கள் அதிகளவில் சுரண்டப்படுகிறது. குறிப்பாக தமிழகத்தில் மணல் கொள்ளை அதிகளவில் நடைபெறுவதால் வெள்ளம் போன்ற இயங்கை சீற்றங்கள் ஏற்படுகிறது. இவை நீடித்த வளர்ச்சிக்கு தடையாக உள்ளது. இவற்றை நாம் தடுத்து நிறுத்த வேண்டும்.  பாலின சமநிலை நிலவும் தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற சம்பவங்கள் வருந்தத்தக்க வகையில் உள்ளது.

 2015ம் ஆண்டு ஐக்கிய நாடுகளிடையே நடைபெற்ற மாநாட்டில் 17 தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த தீர்மானங்கள் 2030ம் ஆண்டிற்குள் நடைமுறைக்கு கொண்டு வரப்பட உள்ளது. ஏழ்மை, பசி ஒழிப்பு, அனைவருக்கும் சுகாதாரம், தரமான கல்வி, பாலின சமத்துவம் இவை எல்லாவற்றையும் அடைவதற்கு பொதுமக்களிடையே விழிப்புணர்வு வேண்டும். அவர்களின் எண்ணத்தில் மாற்றம் வரவேண்டும். பாரம்பரியமாக உள்ள பெண்கள் அடிமைத்தன எண்ணம் மாற்றப்பட வேண்டும். கல்வி, பொருளாதாரத்தில் சமநிலை ஏற்பட வேண்டும் என்பது மிக முக்கியமானது. இவை அனைத்தும் நிறைவேறினாலே பாலியல் சமநிலை உண்டாகும். பாலியல் குற்றங்களுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் இருந்தாலும், பெண்களுக்கு அடிப்படை உரிமைகள் வழங்கப்படவில்லை. சட்டம்இயற்றக்கூடிய சட்டமன்றங்களில் பெண் உறுப்பினர்களை அதிகரித்தால் மட்டுமே, பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்கான சட்டங்களையும், வளர்ச்சி திட்டங்களையும் கொண்டு வர முடியும். எல்லா துறைகளிலும் பெண்களுக்கு சுதந்திரம் அளித்து ஆதரவு கொடுத்தால் மட்டுமே சமுதாயத்தை உயர்த்திட முடியும் என்று பேசினார்.

 இந்த மாநாட்டில் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதர், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சிவஞானம், சுந்தரேஷ் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக மனித உரிமை குழுவின் இயக்குனர் சந்த்ரா ப்ரிட்மென், சட்டப்பள்ளி துணை வேந்தர் கமலா சங்கரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.