Thursday, January 02, 2020

On Thursday, January 02, 2020 by Tamilnewstv in ,    
விவசாயிகள் நாமம் போட்டு தொடர் உண்ணாவிரதம்


திருச்சியில்
கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் நாமம் போட்டு தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    140 ஆண்டுகள் வரலாறு காணாத  வறட்சியை தமிழகம் கடந்த 2016ஆம் ஆண்டு கண்டது,  2016ஆம் ஆண்டு ஏற்பட்ட கடுமையான வறட்சியின் காரணமாக தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளுக்கு இன்னும் நஷ்டஈடு வழங்காததை வழங்க கோரியும்,  உச்ச நீதிமன்றமே அனைத்து விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய யோசியுங்கள் என்று கூறியும்,  தள்ளுபடி செய்ய மறுக்க கூடாது என்று கோரியும்,  தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய கோரியும்,  நகை ஏலம்  ஜப்தி நடவடிக்கையை நிறுத்திட கோரியும்,  வெங்காயத்தை விவசாயிகளிடம் அரசே நியாமான விலையில் கொள்முதல் செய்து குறைவான விலையில் மக்களுக்கு கொடுக்க கோரியும்,  காவிரியில்  வரும் வெள்ளநீரை 30 ஆண்டுகளுக்கு முன்பே மேட்டூர் - அய்யாறு - உப்பாறு இணைப்பு திட்டம், காவிரி - குண்டாறு - வைகை இணைப்பு  திட்டம் அறிவித்ததை நிறைவேற்ற கோரியும்,  கோதாவரி - காவிரி இணைப்பு திட்டத்திற்கு நிதி ஒதுக்க மத்திய அரசை வலியுறுத்த கோரியும்,  இடுக்கி மாவட்டத்தை கேரளாவில் இருந்து எடுத்து தமிழகத்துடன் இணைத்து முல்லைபெரியார் பிரச்சனை,  58ம் கால்வாயில் வருடம் முழுவதும் தண்ணீர் கிடைக்க கோரியும்,  ஆலடியாறு டேமில் துளையிட்டு கீழ்கூடலூர், கம்பம்,  உத்தமபாளையம்,  போடி,  தேனி,  பெரியகுளம், மஞ்சள் ஆற்றை தாண்டி தேவன்கோட்டை வெள்ளோடு,  திண்டுக்கல் எரியோடு கடவூர் வழியாக திருச்சி வையம்பட்டி பொன்னனையாறு டேமில் இணைக்க கோரியும்,  தமிழக எல்லையில் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழைநீரை வீணாக அரபிக்கடலில் கலக்காமல் தடுப்பதும், ஊட்டியில் பெய்யும் மழைநீரை மாயாறு வழியாக கர்நாடகத்திற்கு செல்லாமல் பவானி டேம்-க்கு திருப்பி விட கோரியும்,  10 ஆண்டுகள் முன்பு குடும்ப கட்டுப்பாடு பிரச்சாரம் செய்த அரசு தற்பொழுது இலாபகரமான விலையை விவசாயிகளுக்கு கொடுக்காமல்,  விவசாயிகளை விவசாயத்தை விரட்டிவிட்டு மரபணு மாற்றப்பட்ட விதைகளை கொண்டு 1 மடங்கு விளைச்சலுக்கு பதில் 5 மடங்கு உற்பத்தியாகும் மரபணு மாற்றப்பட்ட உணவை உற்பத்தி செய்து இளைஞர்களுக்கு கொடுத்து ஆண்மை இழக்கவும்,  பெண்கள் குழந்தை பெற முடியாமல் செய்யும் மரபணு மாற்றப்பட்ட விதை உணவை இறக்குமதி செய்வதை தடுக்க கோரியும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் உண்ணாவிரதம் இன்று தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு  தலைமையில் விவசாயிகள்
 *திருச்சி ஜங்சன் *விவசாயிகள் உடையில் 02.01.2020 முதல் 08.01.2020 வரை 7 நாட்கள் (காலை 8 மணி முதல் இரவு 6 மணி வரை) தொடர் உண்ணாவிரதம்* இன்று நாமம் அணிந்துகொண்டு துவங்கியுள்ளனர்.

0 comments: