Wednesday, December 18, 2019

On Wednesday, December 18, 2019 by Tamilnewstv in ,    
திருச்சியில் மே மாதம் சர்வதேச சிலம்ப போட்டி

திருச்சி கி.ஆ.பெ.விசுவநாதம் உயர்நிலை பள்ளியில்   வருகின்ற மே மாதம் சர்வதேச அளவிலான சிலம்ப போட்டி நடைபெற உள்ளது.

பள்ளியில் நடைபெற்ற கூட்டத்தில் கி.ஆ.பெ.பள்ளி தலைவர் டாக்டர். வி.ஜெயபால், தேசிய கல்லூரி பேராசிரியர்  டாக்டர் மாணிக்கம், சுருளி ஆண்டவர் தற்காப்பு கலைகூட தலைவர் இரா.மோகன், துணை தலைவர். எஸ்.சிவா, கோபாலகிருஷ்ணன், கணேஷ், அரவிந்த், மலேசியா மற்றும் சிங்கப்பூர் சிலம்ப ஆசான்கள், சிலம்ப மாணவர்கள் மற்றும் சிலம்ப பயிற்சியாளர்கள் பங்கேற்றனர்

இன்று 18.12.2019 புதன்கிழமை பள்ளியில் நடைபெற்ற கூட்டத்தில் மலேசியாவில் இருந்து வருகை பங்கேற்ற மலேசிய சிலம்ப கோர்வை மற்றும் சிங்கப்பூர் சிலம்ப கோர்வை கழக கு.அன்பழகன் கூறுகையில் நான் மலேசியா மற்றும் சிங்கபூரில் சிலம்ப பள்ளி வைத்துள்ளேன்  அங்கு பல மாணவர்களுக்கு சிலம்பம் கற்று கொடுக்கிறேன் மேலும் டிசம்பர் 01 ம் தேதியன்று சிங்கபூரில் சிலம்ப போட்டி நடத்தினேன் அதில் சிங்கப்பூர், மலேசியா மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் இருந்து 160 க்கும் மேற்பட்ட மாணவர்கள் போட்டியில் பங்கேற்றனர் தற்பொழுது தமிழகத்தில் அதுவும் திருச்சியில் தமிழர் பாரம்பரிய கொடுக்பட்டு சிலம்பத்தில் சர்வதேச போட்டி நடைபெற இருக்கின்றது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கின்றது.

இந்த போட்டியில் நானும் என்னுடைய 30 க்கும் மேற்பட்ட சிங்கப்பூர் மற்றும் மலேசிய மாணவர்களுடன் கலந்து கொள்ள இருக்கின்றோம் என கூறினார்.

இந்த கூட்டத்தில் மே மாதம் நடைபெற இருக்கும் போட்டிக்கான குழுவினர் தேர்ந்தெடுக்கப்பட்டனர் தலைவராக டாக்டர். ஜெயபால், துணை தலைவராக டாக்டர். வி.ஜே.செந்தில், சிங்கப்பூர் தமிழ் மகன் (எ) கண்ணன், மலேசிய மாஸ்டர் அன்பழகன் ஆகியோரும் செயலாளராக எஸ்.சிவா ஆகியோரும் இணை செயலாளராக சிங்கப்பூர் மருதீஸ்வரன் மற்றும் திருச்சி சிலம்ப மாஸ்டர் ஜெயக்குமார் ஆகியோரும் ஒருங்கிணைப்பாளராக இரா.மோகன் ஆகியோர் தேர்தெடுக்கப்பட்டனர்.

இந்த நிகழ்ச்சியில் சிங்கப்பூரில் நடைபெற சிலம்ப போட்டியில் பங்கு பெற்று தங்கம் பெற்ற அரவிந்த் மற்றும் சுகித்தாவிற்கு பாராட்டி சான்றிதழ் வழங்க பட்டு இளம் வீராங்கனையான சுகித்தாவிற்கு தங்க மீன் பரிசாக கொடுக்பட்டு சிலம்ப சாதனை நாயகி பட்டமும் வழங்கபட்டு சுகித்தாவின் பயிற்சியாளர் அரவிந்தையும் பாராட்டினார்.

நிகழ்ச்சியில் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் சுந்தரேசன், உடற்கல்வி ஆசிரியர் முத்துகுமார், பிரியா மற்றும் பாலா மலேசியாவில் இருந்து 10 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

0 comments: