Wednesday, December 18, 2019

On Wednesday, December 18, 2019 by Tamilnewstv in    
திருச்சி  டிச 18

திருச்சி அனைத்து  ஜமாஅத்துல்
இஸ்லாமிய இயக்கங்கள், அரசியல் கட்சிகள் மற்றும்
அனைத்து மஹல்லா ஜமாஅத்துகள் கூட்டமைப்பு மற்றும் அனைத்து கட்சி, இயக்கங்கள் சார்பாக
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


திருச்சி மாவட்ட, மாநகர ஜமாஅத்துல்உலமா சபை, இஸ்லாமிய இயக்கங்கள், அரசியல்
கட்சிகள் மற்றும் அனைத்து மஹல்லா ஜமாஅத்துகள் ஒருங்கிணைந்து நடத்தும் இனரீதியாக
மதரிதியாக இந்தியாவை பிளவுபடுத்தும் தேசிய குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை கண்டித்து
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
இப்ராஹீம் பூங்கா அருகில் நடைபெற்றது


இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முஹம்மது குஹீல் ஹக் திருச்சி மாவட்ட ஜமாத்துல் உலமா சபை



தலைவர் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளார்களாக
இராமநாதபுரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஹாஜி
K.நவாஸ் கனி, காங்கிரஸ் கட்சியின் வேலுச்சாமி ஆகியோர்
கலந்து கொண்டு கண்டனயுரை நிகழ்த்தினர்.


இந்த ஆர்ப்பாட்த்திற்கு திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து இள்லாமிய கட்சிகளும்
இயக்கங்களும், அனைத்து ஜமாத் பள்ளி நிர்வாகிகளும் கலந்து கொண்டு முன்னிலை வகித்தனர்.
பொதுமக்களும், சமுக ஆர்வலர்களும் என 5,000கும் மேற்பட்டவர்கள்
கலந்து கொண்டு கண்டன கோங்களை எழுப்பினர்.


மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் 
இந்திய அரசியல் சாசனத்தின் புனிதத்தை குலைக்கும் வகையில் குடியுரிமைச் சட்ட திருத்த
மசோதாவை நிறைவேற்றியுள்ள மத்திய பாஜக அரசை வன்மையாக கண்டிக்கிறோம்,
மக்களுக்கிடையே மதத்தின் பெயரால் பிளவை ஏற்படுத்தும் தனது தொடர் முயற்சிகளை
பாஜக அரசு நிறுத்திக் கொள்ளாவிட்டால் இந்திய ஒருமைப்பாட்டிற்கு அது பெரும் அச்சுறுத்தலாக
அமைந்து விடும் என மத்திய அரசை எச்சரிக்கிறோம்,

இஸ்லாம் மற்றும் முஸ்லீம்கள் விவகாரத்தில் வெறுப்புணர்வை ஏற்படுத்துவதை இலக்காக
கொண்டு செளயல்படுவதை நிறுத்திக் கொள்ளுமாறு மத்திய அரசை கேட்டுக்கொள்கிறோம்,
இம்மசோதாவினால் ஏற்படக்கூடிய துயரமான விளைவுகளை கவனத்தில் கொண்டு உச்சநீதிமன்றம் இம்மசோதா விவகாரத்தில் நல்லதொரு திர்ப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கிறோம்
இம்மசோதா, இந்தியாவோடு தொப்புள் கொடி உறவு கொண்ட இலங்கை தமிழ்
அகதிகளையும், உலகின் படுமோசமான நிலையிலுள்ள ரோகிங்யா அகதிகளையும் திட்டமிட்டு
புறக்கணித்து - அநீதியிழைத்ததற்கு கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறோம் உட்பட பல்வேறு
தீர்மானங்களும் நிறைவெற்றப்பட்டன

0 comments: