Sunday, January 05, 2020

On Sunday, January 05, 2020 by Tamilnewstv in ,    
திருச்சி

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா பகல்பத்து உற்சவம் நிறைவு நாளான இன்று 5ஆம் தேதி நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி காட்சி அளிக்கிறார்


 நாளை ஆறாம் தேதி அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு விழா நடக்க இருக்கிறது 108 வைணவத் திருத்தலங்களில் முதன்மையான பூலோக வைகுண்டம் என சிறப்புக்குரியது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயம் ஆகும் ஆண்டுதோறும் மார்கழி மாதம் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி விழாவில் உள்ளூர் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் தெய்வ தரிசனம் செய்ய வருகிறார்கள் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த டிசம்பர் 26 ஆம் தேதி திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் தொடங்கியது அதன் பின் பகல்பத்து உற்சவம் கடந்த 27ஆம் தேதி துவங்கியது பகல் பத்து உற்சவத்தின் பத்து நாள் ஆகி நிறைவு இன்று 5ஆம் தேதி நம்பெருமாள் மோகினி அலங்காரம் எனப்படும் நாச்சியார் திருக்கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார் பக்தர்கள் மோட்சம் அடைய விரும்பினால் மண்ணாசை பொன்னாசை பெண்ணாசை போன்ற ஆசைகளைத் துறக்க வேண்டும் ஆசைகளை கொடூரமான ஆசை பெண்ணாசை எனவே பெண்ணாசையை கைவிட்டு பிறந்தவர்கள் தான் மோட்சத்தை அடையலாம் என்ற தத்துவத்தை உணர்த்தும் வகையில் நம்மால் இன்று 5ஆம் தேதி மோகினி அலங்காரத்தில் அழகிய பெண் வேடத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு முன்பு காட்சியளிக்கிறார் மோகினி அலங்காரம் இன்று நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து மோகினி அலங்காரத்தில் காலை 6 மணிக்கு புறப்பட்டு பகல்பத்து உற்சவம் அண்ட் அர்ஜுன மண்டபத்திற்கு 7 மணிக்கு வந்து சேருகிறார் 7 மணி முதல் 7 மணி வரை திரை அதன்பின் ஏழரை மணி முதல் 11 மணி வரை அரையர் சேவை மற்றும் பொது பொதுஜன சேவையுடன் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார் அதன் பின் இரண்டாவது அரையர் திருமொழியில் விருந்து ராவண வதம் நிகழ்ச்சி போது ஜன சேவையுடன் காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறுகிறது தொடர்ந்து இரண்டரை மணி முதல் 3 மணி வரை வெள்ளி சம்பா அமுது செய்ய திரை அதன்பின் உபயகாரர் மரியாதையுடன் பக்தர்கள் தரிசனம் மாலை நாலு மணி வரை நடைபெறுகிறது அதனைத் தொடர்ந்து 4 மணி முதல் நாலரை மணிவரை பொது சேவை நடக்கிறது அதன் பின் நம்பர் மாலை 5 மணிக்கு பகல்பத்து அர்ஜுன மண்டபத்தில் இருந்து புறப்பட்டு மாலை 5 மணிக்கு ஆரிய படல் வாசல் வந்து சேருகிறார் அதன்பின் அங்கிருந்து திருக்கொட்டாரம் பிரகாரம் வழியாக வலம் வந்து கருட மண்டபத்திற்கு இரவு 7 மணிக்கு வந்து சேருகிறார் அங்கு ஆழ்வார்கள் ஆச்சாரியார்கள் மரியாதை செய்த பின்னர் இரவு 8 மணிக்கு கருட மண்டபத்தில் இருந்து புறப்பட்டு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார் இன்று மூலவர் முத்தங்கி சேவை காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை அதன் பின் மூலஸ்தான சேவை கிடையாது நாளை 6 ஆம் தேதி அதிகாலை பரமபதவாசல் திறப்பு விழா நடைபெறுகிறது விழா ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் கோவில் அறங்காவலர் குழு தலைவர் வேணு சீனிவாசன் இணை ஆணையர் ஜெயராமன் சுந்தர் பட்டர் பட்டர் கோவில் அலுவலர்கள் பணியாளர்கள் செய்துள்ளனர்

0 comments: