Sunday, January 05, 2020

On Sunday, January 05, 2020 by Tamilnewstv in    
திருச்சி விவசாயிகள்  மண்டையோடு  எலும்புகள் கையில் மண் சட்டியை வைத்து  வைத்து நூதன போராட்டம்

வாக்குறுதியை நிறைவேற்றாததால் திருச்சி விவசாயிகள் 3 நாளாக உண்ணாவிரதம் இருந்தனர்

 கடந்த 2014 ஆம் ஆண்டு வறட்சியால் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் அனைத்து விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் நகை ஏலம் ஜப்தி நடவடிக்கையை நிறுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் கத்தினர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து மனு அளிக்க முடிவு செய்தனர் ஆனால் முதல்வரை சந்திக்க அனுமதி கிடைக்கவில்லை எனவே முதல்வரை சந்திக்க அனுமதி பெற்றுத் தராத மாவட்ட நிர்வாகத்தின் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஜங்ஷன் அரிஸ்டோ மேம்பாலம் அருகே தொடர் உண்ணாவிரதம் ஆக ஏழு நாள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது அதன்படி கடந்த 3ஆம் தேதி முதல் உண்ணாவிரதம் தொடங்கியது நேற்று முன்தினம் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு மற்றும் விவசாயிகளிடம் மாவட்ட ஆட்சியர் சிவராசு பேச்சுவார்த்தை நடத்தினர் அப்போது முதல்வரை சந்திக்க ஏற்பாடு செய்கிறோம் போராட்டத்தை கைவிடுங்கள் என்று மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டு கேட்டுக்கொண்டார் அதனால் இரண்டாவது நாள் உண்ணாவிரதம் கைவிடப்பட்டது இந்நிலையில் வேளாண்துறை அமைச்சர் மற்றும் வேளாண்துறை செயலாளரை சந்திக்க ஏற்பாடு செய்கிறோம் என்று மாவட்ட ஆட்சியர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது இதை ஏற்காத விவசாயிகள் அய்யாக்கண்ணு தலைமையில் அதே இடத்தில்  3 நாளாக உண்ணாவிரதம் நடத்தினர் போராட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் நெற்றியில் பட்டை போட்டு எலும்பு துண்டுகள்  மண்டையோடு  வைத்து நூதன முறையில் போராட்டம் தொடர்ந்து போராட்டம் நடத்தப்பட உள்ளதாக விவசாயி அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார்

0 comments: