Saturday, September 22, 2018
On Saturday, September 22, 2018 by Tamilnewstv in Trichy rsabarinathan
திருச்சி_22.09.18
தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற சம்பவங்கள் வருந்தத்தக்க வகையில் உள்ளது என்று உச்ச நீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி கவலை தெரிவித்தார்
திருச்சி நவலுர் குட்டப்பட்டுவிலுள்ள தமிழ்நாடு தேசிய சட்டப்பள்ளியில் சர்வதேச மாநாடு நடைபெற்றது. பாலின சமத்துவத்தில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில், இந்தியா, இங்கிலாந்து, ஜெர்மன், மெக்சிகோ நாடுகளை சேர்ந்த பேராசிரியர்கள், தேர்தெடுக்கப்பட்ட மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த சர்வதேச மாநாட்டில் கலந்து கொண்ட உச்சநீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி பேசும்போது......
நமது இந்திய அரசியல் அமைப்பு சட்டமானது, பெண்கள் முன்னேற்றத்திற்கான பல அம்சங்களை கொண்டுள்ளது. அவர்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்கான சட்டங்களோடு, பெண்களை சமுதாயத்தில் முன்னேற்றி விடுவதற்கான பல அம்சங்களை கொண்டுள்ளது. சமத்துவத்தில் முன்னோடி மாநிலமான தமிழகத்திலும் கூட பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்து வெளியாகும் செய்திகள் வருந்தத்தக்க வகையில் உள்ளது. அதே சமயம் தமிழகத்தின் சென்னை உயர்நீதிமன்றத்தில் தான் மொத்தம் உள்ள 62 நீதிபதிகளில் 12 பேர் பெண்களாக கடந்த ஆண்டு இருந்து வந்தனர்.
நான் அந்த நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த போது, இந்த சிறப்பு நிலவியது. ஆனால் இதுவும் கூட ஐந்தில் ஒரு பங்கிற்கும் குறைவானதாகும். இந்திய நீதித்துறையின் உயர் பதவியில் பெண்கள் அதிகளவில் வரவேண்டும். இந்திய அரசியல் சட்டம் உருவாக்கப்பட்ட பிறகு, உச்ச நீதிமன்றத்தில் ஒரே நேரத்தில் 3 பெண்கள் நீதிபதிகளாக பதவி ஏற்றது இதுவே முதல்முறையாக உள்ளது. நாட்டில் இயற்கை வளங்கள் அதிகளவில் சுரண்டப்படுகிறது. குறிப்பாக தமிழகத்தில் மணல் கொள்ளை அதிகளவில் நடைபெறுவதால் வெள்ளம் போன்ற இயங்கை சீற்றங்கள் ஏற்படுகிறது. இவை நீடித்த வளர்ச்சிக்கு தடையாக உள்ளது. இவற்றை நாம் தடுத்து நிறுத்த வேண்டும். பாலின சமநிலை நிலவும் தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற சம்பவங்கள் வருந்தத்தக்க வகையில் உள்ளது.
2015ம் ஆண்டு ஐக்கிய நாடுகளிடையே நடைபெற்ற மாநாட்டில் 17 தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த தீர்மானங்கள் 2030ம் ஆண்டிற்குள் நடைமுறைக்கு கொண்டு வரப்பட உள்ளது. ஏழ்மை, பசி ஒழிப்பு, அனைவருக்கும் சுகாதாரம், தரமான கல்வி, பாலின சமத்துவம் இவை எல்லாவற்றையும் அடைவதற்கு பொதுமக்களிடையே விழிப்புணர்வு வேண்டும். அவர்களின் எண்ணத்தில் மாற்றம் வரவேண்டும். பாரம்பரியமாக உள்ள பெண்கள் அடிமைத்தன எண்ணம் மாற்றப்பட வேண்டும். கல்வி, பொருளாதாரத்தில் சமநிலை ஏற்பட வேண்டும் என்பது மிக முக்கியமானது. இவை அனைத்தும் நிறைவேறினாலே பாலியல் சமநிலை உண்டாகும். பாலியல் குற்றங்களுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் இருந்தாலும், பெண்களுக்கு அடிப்படை உரிமைகள் வழங்கப்படவில்லை. சட்டம்இயற்றக்கூடிய சட்டமன்றங்களில் பெண் உறுப்பினர்களை அதிகரித்தால் மட்டுமே, பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்கான சட்டங்களையும், வளர்ச்சி திட்டங்களையும் கொண்டு வர முடியும். எல்லா துறைகளிலும் பெண்களுக்கு சுதந்திரம் அளித்து ஆதரவு கொடுத்தால் மட்டுமே சமுதாயத்தை உயர்த்திட முடியும் என்று பேசினார்.
இந்த மாநாட்டில் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதர், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சிவஞானம், சுந்தரேஷ் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக மனித உரிமை குழுவின் இயக்குனர் சந்த்ரா ப்ரிட்மென், சட்டப்பள்ளி துணை வேந்தர் கமலா சங்கரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
கரூர் மாவட்ட ஆட்சியர் மழையால் பாதி த்த மக்களுக்கு மதிய உணவு வழங் கினர் ....
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
-
வெள்ளிக்கிழமை மாலை மாநாட்டு அரங்கில் தமுஎகச படைப்பாளிகளின் புதிய படைப்புகள் அறிமுக நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் கவிதைகள், பாடல்கள் ம...
-
உடுமலை வட்டம் குடிமங்கலம் ஒன்றியம் முக்கூரு ஜல்லிப்பட்டியை சார்ந்த R. மருதமுத்து, அ. தி. மு.க. பொதுசெயலாளர் ஜெயலலிதாவுக்கு ஜெயில் தண்டனை எ...
-
திருச்சி ஹர்ஷமித்ரா மருத்துவமனையில், புற்றுநோய் சிகிச்சைக்கு மற்றுமோர் நவீன கருவி அறிமுகம். ஹர்ஷமித்ரா மருத்துவமனை கடந்த 12 ஆண்டுகளாக திர...
-
அங்கீகாரம் இல்லாத மருத்துவ படிப்பு சுகாதாரத்துறை அமைச்சருக்கு நடவடிக்கை எடுக்க கோரிக்கை, உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமா? சமூக ஆர்வலர்கள் எத...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
0 comments:
Post a Comment