Thursday, February 13, 2020

On Thursday, February 13, 2020 by Tamilnewstv in ,    

திருச்சியில் காணாமல்போன மக்கள் நல சங்கங்கள் எங்கே? கருப்பு ஆடுகள்  
களை எடுக்கப்படுமா ?





கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருச்சி மாவட்ட காவல்துறை ஆணையரிடம் எல்பின் நிறுவனத்தால் ஏமாற்றப்பட்ட பொதுமக்கள் 45 பேர்  எல்பின் நிறுவனம் ஏற்கனவே  RMWC  என்ற பெயரில் ஓர் நிறுவனம் நடத்தி வந்துள்ளனர் . இவர்களால் நாங்கள் பாதிப்படைந்து விட்டோம் நாங்கள் கட்டிய பணத்தை இது நாள் வரை அவர்கள் திருப்பிக் கொடுக்கவில்லை என புகார் அளித்தனர்.

அந்த புகார் மனுவை வைத்து திருச்சி மாநகர் முழுவதும் பொதுமக்கள் விழிப்புணர்வு அடையும் வகையில் ? அந்த மக்கள் நல சங்கத்தினரால் அரசு மற்றும் அரசு அதிகாரிகளை எச்சரிக்கும் வண்ணம் போஸ்டர் அடித்து ஒட்டப்பட்டது. 


இதனைத்தொடர்ந்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தி எல்பின் நிறுவன பங்குதாரர்கள் மீது வழக்கு தொடர்ந்தனர். குற்ற பொருளாதாரப் பிரிவு காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்ட பொழுது உரிமையாளர்களான ராஜா என்கிற அழகர்சாமி ரமேஷ் என்கிற ரமேஷ் குமார் மற்றும் இவருடன் உள்ள எல்பின் பங்குதாரர்கள் எங்கு சென்றனர் ஆய்வின் போது எங்கே இருந்தனர்? இன்று  வரை கேள்விக்குறியாகவே உள்ளது இவ்வழக்கு விசாரணை இன்றுவரை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

(இதுபோன்று திருச்சி தில்லை நகர் பகுதியில் செந்தூர் பின்கார்ப் என்ற நிறுவனம் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினரால் சீல் வைக்கப்பட்டது)

இந்நிலையில்  பொதுநலன் கருதும் மக்கள் நல சங்கத்தை தான் வசப்படுத்தி விட்டதாகவும் மேலும் தன்னைப் பற்றி செய்தி வெளியிட்ட இரு முன்னணி நாளிதழுக்கு விளம்பரம் கொடுத்து வாயை அடைத்து விட்டதாகவும் மார்தட்டி வருகிறார்கள் அழகர்சாமி என்கிற ராஜா, ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்.


தற்போது எல்பின் நிறுவனத்தில் அடிக்கடி போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர் நேற்று கூட தஞ்சை போலீசார் சோதனை மேற்கொண்டனர் இதில் எந்த முக்கிய ஆவணங்களும் சிக்க இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. உரிமையாளர்கள் அங்கு இருப்பதில்லை.
இதற்கு காரணம் நேர்மையாக பணியாற்றும் காவல் துறையினர்  இவர்களை ஆய்வுசெய்யும்  பல்வேறு துறைகள் இடையே ஒரு சில கருப்பு ஆடுகள்  எல்பின் நிறுவனத்திற்கு முன்னதாகவே தகவல் தருவதாக ஒரு சிலர் கூறுகின்றனர்.

இந்த கருப்பு ஆடுகளை தமிழக அரசும்  திறன்பட  செயல்பட்டுக் கொண்டிருக்கும் டிஜிபி  களை எடுப்பார என பாதிப்படைந்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள்  எதிர்பார்க்கின்றனர்.

மேலும் எனக்கு கோடி ரூபாய் விலை பேசி அரசியல் பிரமுகர்களிடம் அழுத்தம் செய்வதாக வெளியில் கூறிக்கொண்டே திரிகிறார்கள் இது முற்றிலும் தவறான தகவல் இந்த மாதிரி பொய்யான தகவல்களை பரப்புவோர் மீது காவல்துறை மூலமாக தகுந்த நடவடிக்கை எடுப்பேன் மேலும் என்னிடம் உள்ள ஆதாரங்களை  ஒவ்வொன்றாக வெளியுலகிற்கு கொண்டுவருவேன் இப்படிக்கு சத்தியமூர்த்தி ஜெய்ஹிந்த் என தெரிவித்தார்

0 comments: