Thursday, February 13, 2020

On Thursday, February 13, 2020 by Tamilnewstv in ,    
தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனம் சார்பில் விவசாயிகளுக்கான விழிப்புணர்வு பயிற்சி முகாம் இன்று நடைபெற்றது.

 திருச்சி காந்தி மார்க்கெட் பழைய பால்பண்ணை அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்த இந்த பயிற்சி முகாமின் துவக்க விழாவில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கலந்து கொண்டார்.


 மாவட்ட ஆட்சியர் சிவராசு உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் விவசாயிகளுக்கு மருந்து தெளிக்கும் கைத் தெளிப்பான் கருவி வழங்கப்பட்டது.

திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்ட விவசாயிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அப்போது அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில்

தமிழக பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்படுகிறது. சிறந்த பட்ஜெட்டை தமிழக அரசு வழங்கும். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அறிவிப்பை ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். எந்த திட்டமாக இருந்தாலும் ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவிப்பதையே தனது அன்றாட பணியாகக் கொண்டுள்ளார். பலரும் பாராட்டக்கூடிய வேளாண் மண்டல அறிவிப்பை குறை கூறினால், அதற்கு எப்படி நான் பதில் கூறுவது.
 தமிழக அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது  மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.


தமிழக விவசாயிகளின் நண்பனாக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. இதனால் பலரும் தமிழக அரசுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர். விவசாயிகளின் நண்பனாக, ஒரு விவசாயியின் தலைமையில் ஒரு ஆட்சி தமிழகத்தில் நடைபெறுகிறது. டாஸ்மாக் மதுபான கடைகளில் அனுமதியில்லாத நேரங்களில் மதுபானம் விற்பனை செய்யப்படுவது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

திருச்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த வகையில் ஆக்கிரமிப்புகளும் உரிய முறையில் அகற்றப்படும். ஆக்கிரமிப்பாளர்களை அழைத்து பேசி அவர்களுக்கு மாற்று இடம் கொடுத்து ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு பொழிவான நகரமாக உருவாக்குவோம் என்றார்.

0 comments: