Wednesday, September 21, 2016

On Wednesday, September 21, 2016 by Unknown in    

திருப்பூர்,கேரளாவில் சரக்கு ரெயில் தடம் புரண்டதால் திருப்பூர் வழியாக செல்லும் ரெயில்கள் மாற்று வழியில் இயக்கப்பட்டன. இதனால் பயணிகள் மிகவும் அவதி அடைந்தனர்.மாற்றுவழியில் இயக்கம்

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து நேற்று முன்தினம் உரம் ஏற்றிக்கொண்டு கோட்டயம் நோக்கி சென்ற சரக்கு ரெயில் கொல்லம் அருகே நேற்று அதிகாலை திடீரென தடம்புரண்டது. இதனால் அந்த வழியாக நேற்று ரெயில் போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டது.இதனால் திருப்பூர் வழியாக திருவனந்தபுரம் செல்லும் ரெயில்கள் நேற்று காலை திருப்பூர் வராமல் ஈரோட்டில் இருந்து கரூர், மதுரை, நெல்லை வழியாக திருவனந்தபுரத்துக்கு மாற்று வழியில் இயக்கப்பட்டன. இதேபோல் திருவனந்தபுரத்தில் இருந்து கோவை, திருப்பூர், ஈரோடு வழியாக சென்னை, மும்பை மற்றும் வடமாநிலங்களுக்கு செல்லும் ரெயில்கள் மதுரை, கரூர், ஈரோடு வழியாக இயக்கப்பட்டன.5 மணி நேரம் தாமதம்

இதேபோல் கேரளாவுக்கு சென்று வரும் பல்வேறு ரெயில்கள் நேற்று மாற்று வழியில் இயக்கப்பட்டன. ரெயில் போக்குவரத்து திடீரென மாற்றி அமைக்கப்பட்டதால் பயணிகள் திட்டமிட்ட நேரத்திற்கு தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு சென்றடைய முடியாமல் அவதி அடைந்தனர்.இதற்கிடையே திருவனந்தபுரத்தில் இருந்து மாலை 4.10 மணிக்கு திருப்பூர் வரவேண்டிய ரப்திசாகர் ரெயில் 5 மணி நேரம் தாமதமாக இரவு 9.10 மணிக்கு வந்து சென்றது. இதனால் திருப்பூர் ரெயில் நிலையத்தில் நேற்று இரவு பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. திருப்பூர் வழியாக ரத்து செய்யப்பட்ட ரெயிலில் பயணம் செய்ய வேண்டிய பயணிகள் இந்த ரெயில் மூலம் தாங்கள் செல்ல வேண்டிய ஊருக்கு சென்றனர்.

0 comments: