Wednesday, September 21, 2016

On Wednesday, September 21, 2016 by Unknown in    

திருப்பூர்,பட்டாகேட்டு, 63 வேலம்பாளையம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் ரேஷன்கார்டு, ஆதார் அட்டை போன்ற ஆவணங்களை ஒப்படைக்க கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.குறைதீர்க்கும் நாள் கூட்டம்

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் எஸ்.ஜெயந்தி தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. நேற்று ஒரு நாளில் மட்டும் இலவச வீட்டுமனை பட்டா, உதவித்தொகை போன்ற பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 2,400 மனுக்கள் கொடுக்கப்பட்டன.கூட்டத்துக்கு, பல்லடம் 63 வேலம்பாளையம் கிராமம் வி.ஆர்.பி.நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள், தாங்கள் வசிக்கும் குடியிருப்புக்கு பட்டா கேட்டு ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் சுந்தரபாண்டியன் தலைமையில் ஆதார் அட்டை, ரேஷன்கார்டு, வாக்காளர் அட்டை போன்ற ஆவணங்களை கலெக்டரிடம் ஒப்படைக்க வந்தனர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.செல்போன் கோபுரங்கள்

பாரத அன்னையர் முன்னேற்ற கழகத்தினர் தலைமையில் வந்த திருப்பூர் மாநகராட்சி 18–வது வார்டு பகுதி பொதுமக்கள், தங்கள் பகுதியில் விபத்து அதிக அளவில் நடப்பதால் விபத்தை தடுக்க அடிப்படை வசதிகள் கேட்டும் மனு கொடுத்தனர். நல்லூர் நுகர்வோர் அமைப்பினர் கொடுத்த மனுவில், மாநகராட்சி பகுதி மற்றும் மாவட்டம் முழுவதும் செல்போன் கோபுரங்களில் பெரும்பாலானவை சேதமடைந்து கீழே விழும் நிலையில் இருப்பதாகவும், அவற்றை உடனே சரிசெய்ய சம்பந்தப்பட்ட செல்போன் நிறுவனங்களுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கூறியிருந்தனர்.சிவசேனா அமைப்பினர் கொடுத்த மனுவில், காஷ்மீரில் ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் மீது போர் தொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருந்தனர். ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தினர் தலைமையில் வந்த கட்டுமான பெண் தொழிலாளர்கள், தங்களுக்கும் பேறுகால பயன் 9 மாதம் ஊதியத்துடன் விடுமுறை வழங்க வேண்டும் என்று கூறி மனு கொடுத்தனர்.நலத்திட்ட உதவிகள்

பல்லடம் ஆறுமுத்தாம் பாளையம் அறிவொளிநகர் பகுதி பொதுமக்கள் கொடுத்த மனுவில், தங்கள் பகுதியை தூய்மையாக வைத்திருக்க குப்பை தொட்டிகள் அமைத்து கொடுக்க கோரிக்கை விடுத்திருந்தனர். தமிழ்நாடு தியாகி குமரன் பொது தொழிலாளர் சங்கத்தினர் கொடுத்த மனுவில், மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் அடிக்கடி விபத்து ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.கூட்ட முடிவில், பல்லடம் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 பயனாளிக்கு தலா ரூ.12 ஆயிரத்துக்கான மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகையும், ஒரு பயனாளிக்கு முதல்–அமைச்சரின் விபத்து நிவாரண நிதியாக ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையும் மாவட்ட கலெக்டர் வழங்கினார்

0 comments: