Wednesday, July 30, 2014

On Wednesday, July 30, 2014 by Unknown in , ,    








திருப்பூர், ஜூலை.30-
இராக்கியாபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் 12 பயனாளிகளுக்கு வீட்டு வசதி கடனை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், எம்.எல்.ஏ.கருப்பசாமி ஆகியோர் வழங்கினார்.
திருமுருகன்பூண்டி இராக்கியாபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் வீட்டு வசதி கடன் வழங்கும் விழா மண்டல துணை இயக்குனர் (கூட்டுறவு)பாபு தலைமையில் நடைபெற்றது. அவிநாசி எம்.எல்.ஏ. கருப்பசாமி, துணை மேயர் குணசேகரன், திருமுருகன்பூண்டி பேரூராட்சி துணைத்தலைவர் கே.விஸ்வநாதன், பேரூராட்சி செயல் அலுவலர் நந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க செயலாளர் அவிநாசிலிங்கம் வரவேற்றார்.
விழாவில் வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் கலந்து கொண்டு 12 பயனாளிகளுக்கு ரூ 35 லட்சத்து 50 
ஆயிரத்துக்கு வீட்டுவசதிக்கடனை வழங்கினார். அப்போது அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன்  பேசியதாவது:-
தமிழக மக்களுக்காக ஒவ்வொரு துறை வாரியாக பல்வேறு திட்டங்களை சிறப்பாக செய்து வருகிறார;. மூன்றாண்டுகளில் நலிந்து கிடந்த கூட்டுறவு சங்கம் தற்போது மேம்பட்டு உள்ளது என்றால் தமிழக முதலமைச்சர்அம்மா  ஆட்சியில் தான். விலை வாசிகளை கட்டுபடுத்துவதுக்காக மலிவு விலையில் கிடைக்கும் அளவுக்கு கூட்டுறவு துறை மூலம் பல திட்டங்களை கொடுத்து வருகிறார;. இந்த சங்கத்தில் தற்போது 2 ஆயிரத்து 550 போ் உறுப்பினராக உள்ளனர். அவிநாசி வட்டாரத்தில் வீட்டுக்காக கடன் என்று இராக்கியாபாளையம் தொடக்க வேளாண்மை கடன் சங்கத்தில் மட்டும் தான் முதல் முறையாக கொடுக்கப்படுகிறது. புதிய வீடு கட்ட ரூ.5 லட்சமும், கட்டிய வீடுகளின் பழுதுபார்க்கும் பணிக்கு ரூ. லட்சமும் வழங்கப்பட்டு வருகிறது. இச்சங்கத்தின் மூலம் ரூ.16 கோடி மதிப்பில் 3 ஆயிரம் பயனாளிகளுக்கு நகைக்கடனும், ரூ.50 லட்சம் மதிப்பில் 40 பயனாளிகளுக்கு விவசாயக்கடனும், ரூ.40 லட்சம் மதிப்பில் 50 பயனாளிகளுக்கு வைப்புக்கடனும், ரூ.16 கோடி மதிப்பில் 2 ஆயிரம் பேருக்கு வைப்பு நிதி நிலுவை கடனும், ரூ. 5லட்சம் மதிப்தில் 10 பேருக்கு மத்திய காலக்கடனும், ரூ.40 லட்சம் மதிப்பில் 35 பயனாளிகளுக்கு மகளிர் கடனும், ரூ.50 ஆயிரம மதிப்பில் 10 மாற்று திறனாளிகளுக்கு ஊனமுற்றோர் கடனும் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் கருவம்பாளையம் மணி, மாவட்ட மாணவரணி செயலாளர் அன்பகம் திருப்பதி, பேரூராட்சி முன்னால் தலைவர் லதா, சங்க துணை தலைவர் சுப்பிரமணியம், பழங்கரை ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார், பழங்கரை கூட்டுறவு சங்க தலைவர் துரைசாமி, பேரவை செயலாளர் ராஜேந்திரன், அவைத் தலைவர் கோபால், ராசு என்ற பழனி;சாமி, நடராஜ், ராஜேந்திரன், சேகர், ரங்கசாமி, எஸ்.எம்.ஆர்.ரவி, இயக்குனர்கள் பொண்ணி, நாகலட்சுமி, வளா்மதி, மாரிமுத்து, மீனாட்சிசுந்தரம், பாலாஜி பழனிசாமி மற்றும் விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

0 comments: