Friday, August 01, 2014

On Friday, August 01, 2014 by Anonymous in    
anjaan009








சிங்கம் 2 படத்திற்கு பிறகு சூர்யா, லிங்குசாமி இயக்கத்தில் நடித்திருக்கும் படம் அஞ்சான்.
இப்படத்தில் சூர்யா முதன் முதலாக சமந்தாவுடன் ஜோடி சேர்ந்துள்ளார். மும்பையை மையமாக வைத்து அதிரடி ஆக்ஷன் படமாக உருவான அஞ்சான் படத்தின் வேலைகள் அனைத்தும் முடிந்து விட்டன.
இந்நிலையில் படத்தை சென்சாருக்கு அனுப்பி வைத்தனர். மும்பையில் தணிக்கை செய்யப்பட்ட அஞ்சான் படத்திற்கு, தணிக்கை குழுவினர், படத்தில் ஒரு கட் கூட கொடுக்காமல் யு சான்று அளித்துள்ளனர்.
யு சான்றிதழ் கிடைத்துள்ளதால் படத்திற்கு வரிவிலக்கு உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் கிடைக்கும். இதனால் லிங்குசாமி, சூர்யா, தனஞ்செயன் உள்ளிட்ட அஞ்சான் டீமே மகிழ்ச்சியில் உள்ளனர்.
மேலும் தயாரிப்பாளர் யுடிவி தனஞ்செயன், தனது டிவிட்டர் பக்கத்தில், படம் சொன்ன தேதியில் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகும்.
அஞ்சான் படத்திற்கான புது டிரைலரும் தயாராகி வருகிறது. அடுத்தவாரம் புது டிரைலரை வெளியிட உள்ளோம் என்று கூறியுள்ளார்.

0 comments: