Wednesday, July 23, 2014
On Wednesday, July 23, 2014 by Anonymous in News

துப்பாக்கி திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் விஜய்யும், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாசும் மீண்டும் இணைந்துள்ள கத்தி படத்தை ஐங்கரன் இண்டர்னேஷனல் நிறுவனமும், லைகா புரொடக்சன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகின்றன. கத்தி திரைப்படத்தை தயாரிப்பவர்களில் ஒருவரான லைகா மொபைல் அதிபர் சுபாஸ்கரனை ராஜபக்சேவின் கூட்டாளி என குற்றம்சாட்டி வருகின்றனர் இலங்கைத் தமிழர்கள். தமிழ்நாட்டில் உள்ள தமிழ் ஆர்வலர்களும் இதையே வலியுறுத்தி வருகின்றனர்.
இதனால், கத்தி படத்திற்கு பெரும் பிரச்சனை ஏற்படும் என்று கருதிய தயாரிப்பாளர்களின் ஒருவரான ஐங்கரன் கருணாமூர்த்தி, சில மாதங்களுக்கு முன் செய்தியாளர்களைச் அழைத்து, "லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இலங்கை அரசுக்கு ஆதரவான நிறுவனம் என்ற தகவல், முற்றிலும் தவறானது, ஆதாரமற்றது" என்று மறுத்தார். அதைத் தொடர்ந்து, லைகா நிறுவனத்தின் நிறுவனரான சுபாஸ்கரன் அல்லிராஜா, ராஜபக்சேவுக்கு நெருக்கமானவர்தான் என்பதற்கான பல ஆதாரங்கள் இணையதளங்களில் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.
இந்நிலையில், சிங்கள இனவெறியர்களின் பணத்தில், தயாராகும் கத்தி திரைப்படத்தை வெளியிடக் கூடாது" என்று மாணவர்களின் அமைப்பான முற்போக்கு மாணவர் முன்னணி எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. மாணவர் முன்னணியின் பிரதிநிதிகள் இது தொடர்பாக, திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்கத்தினரையும், திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினரையும் சந்தித்து அறிவுறுத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
முற்போக்கு மாணவர் முன்னணி தலைமை ஒருங்கிணைப்பாளர் மாறன் சுசீந்திரம் அடங்காத் தமிழன் இது பற்றி தமது முகநூல் பக்கத்தில்.... "தமிழ்நாடு திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்கத்தினர் மற்றும் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினரை சந்தித்து, சிங்கள இனவெறியர்களின் பணத்தில் தயாராகி இருக்கும் கத்தி திரைப்படத்தை வெளியிட வேண்டாம் என்று அறிவுறுத்த உள்ளோம். முடிந்தவர்கள் கலந்து கொள்ளுங்கள்" என்று கூறியிருக்கிறார். இதன் தொடர்ச்சியாய் கத்தி படத்துக்கு எதிராக அனைத்து கல்லூரி மாணவர்களை திரட்டி மிகப்பெரிய போராட்டத்தை நடத்தவும் மாணவர்கள் அமைப்புகள் திட்டமிட்டு வருகின்றன.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னையில் இருந்து ஹஜ் பயணத்திற்கு 450 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது. ஹஜ்பயண முதல் விமானம் உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் ...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இ...
-
பொதுமக்கள் காப்பாற்றப்பட வேண்டும் எல்பின் நிறுவனத்தை பற்றிய உண்மை வீடியோ சமூக சேவகர் சத்தியமூர்த்தியும் இந்த செய்தியை வெளி உலக...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
0 comments:
Post a Comment