Wednesday, July 23, 2014

On Wednesday, July 23, 2014 by Unknown in , ,    




திருப்பூர், 23: திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், மக்கள் குறைதீர்ப்புக் கூட்டம் கலெக்டர் கோவிந்தராஜ் தலைமையில் நேற்று நடந்தது. இதில் நல்லூர் நுகர்வோர் நலமன்றத் தலைவர் சண்முகசுந்தரம் வழங்கிய மனுவில்கூறியிருப்பதாவது: திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களில் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் ஏராளமானோர் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களின் பலர் தங்களது அவசரத் தேவைகளுக்காக தனியார் நடத்தும் அடகு கடைகளில் தங்கள் தங்க நகைகளை அடமானம் வைத்து பணம் பெறுகின்றனர்.
கோட்டாட்சியரிடம் முறையான ஆவணங்களை சமர்ப்பித்து, அதற்குண்டான கட்டணத்தை செலுத்தி, பாதுகாப்பு பெட்டகம் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே நகை அடகு கடை நடத்த அனுமதி அளித்திருக்க வேண்டும். ஆனால், திருப்பூர் மாநகரில் பலர் எந்தவிதமான பாதுகாப்பு பெட்டக வசதிகளும் இன்றி அடகு கடை நடத்தி வருகிறார்கள். இதில் சிலர் அடமானத்திற்கு நகையைப் பெற்றுக்கொண்டு கடையை காலிசெய்துவிட்டு ஓடிவிடுகிறார்கள்.
இவ்வாறு போலி நகை அடமான கடைகள் மாநகரில் ஏராளமாக செயல்பட்டு வருகின்றன. ஆகவே இதுகுறித்து கலெக்டர் ஆய்வு செய்து பாதுகாப்பு பெட்டக வசதி இல்லாத நகை அடமான கடைகளின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.

0 comments: