Wednesday, July 23, 2014

On Wednesday, July 23, 2014 by Unknown in , ,    



திருப்பூர், : திருப்பூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிக்கு கட்டடம் கட்ட அரசு நிலத்தை ஒதுக்க வேண்டும் என பொதுமக்கள் கலெக்டரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பூரை அடுத்துள்ள செவந்தாம்பாளையம் பகுதி பொதுமக்கள் கலெக்டர் கோவிந்தராஜிடம் அளித்த மனுவில்: செவந்தாம்பாளையம் கிராமத்தில் செல்வ விநாயகர் கல்வி நிலையம் என்ற பெயரில் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி, கடந்த 1936ம் ஆண்டு முதல் தொடர்ந்து 78 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. 
5ம் வகுப்பு வரை மட்டுமே உள்ள இப்பள்ளி சுமார் 7 சென்ட் நிலத்தில் மட்டுமே செயல்பட்டு வருவதால் கூடுதல் வகுப்பறைகள் கட்ட முடியாமல் மேல் வகுப்பு தொடங்க இயலாத சூழல் உள்ளது. கடந்த 2010ம் ஆண்டு பொதுமக்கள் சார்பில் பள்ளி கட்டிடத்தை நிர்வாகம் செய்து, பள்ளியை தரம் உயர்த்த முடிவு செய்யப்பட்டது.
மேலும் முத்தணம்பாளையம் ஊராட்சி கிராம சபைக் கூட்டத்தில், அப்பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான நத்தம் புறம்போக்கு நிலமான 1.75 ஏக்கர் நிலத்தை பள்ளிக் கட்டிடத்தை விரிவு படுத்துவதற்காக வழங்கலாம் என தீர்மானமும் நிறைவேற்றப்பட்டு கலெக்டரின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 
இந்நிலையில் ஒரு சிலர் மேற்படி இடத்தை ஆக்கிரமிக்க மேற்கொண்ட முயற்சியை தொடர்ந்து ஆர்.டி.ஓ., தலைமையில் நடந்த கூட்டத்தில் அனைத்து கட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டு இடத்தை பள்ளி கட்டிடத்திற்கு வழங்கவே வலியுறுத்தினர். 
தற்போது அப்பகுதியில் ரிங் ரோடு அமைக்கப்பட்டு சாலை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதால், பள்ளிக்கு அருகிலேயே அதிகளவு வாகனங்கள் செல்கின்றன. இதனால் பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. 
அதோடு அரசு நிலத்தின் ஒரு பகுதி வனத்துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. மேற்படி வனத்துறை பயன்பாட்டிற்கு போக மீதி உள்ள இடத்தில், புதிய பள்ளிக் கட்டிடம் கட்டி கூடுதல் வகுப்புகள் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன்மூலம் மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு கிடைப்பதோடு, கல்வித்தரமும் உயர வழி ஏற்படும். 
இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 comments: