Tuesday, July 22, 2014
On Tuesday, July 22, 2014 by Anonymous in Movies

இந்திய திரையுலகமே எதிர்பார்த்துக் கொண்டிருந்த கோச்சடையான் ஒரு வழியாக இன்று வெளிவந்து விட்டது. படம் தொடங்குவதற்கு முன் பாட்ஷா ரஜினி பாணியில் கம்பீரமாக ஆரம்பித்து காலப்போக்கில் மாணிக்கம் ரஜினி போல் அமைதியாகிவிட்டது படம்.
இதை தொடர்ந்து இந்த படத்தில் ரஜினி நடிக்க வில்லை, படம் சரியில்லை என்று சிலர் கொளுத்தி போட, இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கத்தில் ரஜினியே ஒரு தனியார் தொலைக்காட்சியில் இதை பற்றி விவரமாக தெரிவித்தார். அப்பாடா!! ஒரு வழியா படத்தை ரிலிஸ் செய்தா போதும்ன்னு நினைத்த படக்குழுவிற்கு மறுபடியும் வந்தது பெரிய தலைவலி, இந்த முறை பணச்சிக்கல், இதனால் படம் 10 நாட்களுக்கு மேல் தள்ளி போனது, பின்பு ரஜினி தலையிட்டு பேசியதால் இந்த பிரச்சனையும் முடிவுக்கு வர, இன்று (மே 23) உலகம் முழுவதும் சுமார் 6000 தியேட்டர்களில் பிரம்மாண்டமாக வெளிவந்தது தலைவர் படம்.
படத்தின் மிகப்பெரிய பலம் நாங்கள் சொல்லி உங்களுக்கு தெரியவேண்டியது இல்லை கண்டிப்பாக சூப்பர் ஸ்டார் தான், என்ன தான் இது அனிமேஷன் படம் என்றாலும் அதை மறக்கடித்து நம்மை அந்த உலகிற்கே கொண்டு செல்வது ரஜினியின் வாய்ஸ் தான், அவர் கண்ணில் மட்டும் இல்லை, அவரது குரலிலும் காந்தம் உள்ளது. மேலும் யார் என்ன சொன்னாலும் ரஜினியை தவிர வேறு யாரை வைத்தும் இந்த முயற்சியை செய்து இருக்க முடியாது, இதையும் ரஜினியால் மட்டுமே நிகழ்த்தி காட்ட முடியும்.
இப்படி பல பேரின் எதிர்பார்ப்போடு வெளிவந்து இருக்கும் கோச்சடையான் கதை என்னவென்றால், கலிங்கபுரி மற்றும் கோட்டைபட்டினத்திற்கு இடையே நடக்கும் அரசியல் மோதலின் முக்கிய நாயகன் ரணதீரன் என்கிற ராணா.
கலிங்கபுரி மன்னனிடம் அடிமைப்பட்டு கிடக்கும் போர்வீரர்களை மீட்டு அவர்களின் தாய் மண்ணில் சேர்க்க தந்திர நடவடிக்கைகளை கையாளுகிறான் ராணா. ரிஷிகோடனின் மகள் வதனா அவனை காதலிக்கிறாள். ஒரு கட்டத்தில் ராணாவை கைது செய்து சிறையில் அடைக்க, அந்நேரம் கோச்சடையான் யாரென்று அவளிடம் தெரிவிக்கிறான். இறுதியில் போர்மேகம் சூழ்கிறது. அதனை எப்படி ராணா எதிர்கொள்கிறான் என்பதுதான் கதை.
படத்தின் மிகவும் பரிதாபமான நிலைமையில் இருப்பது தீபிகா படுகோனா தான், யார் இவர் என்று கண்டு பிடிப்பதற்கே படம் 8 வது ரீலை தொட்டுவிடுகிறது, இதில் பெரிய கவலை ரசிகனுக்கு தீபிகாவை இந்த கோலத்திலா பார்க்க வேண்டும் என்பது தான். மறைந்த மாபெரும் நடிகர் நாகேஷ் படத்தில் வருவது தொழில் நுட்பத்தின் உச்சம், மேலும் சரத்குமார், ஆதி, ஜாக்கி ஷெராஃப், ஷோபனா என பல நட்சத்திர பட்டாளங்களை அனிமேஷனில் காட்டியிருப்பது சினிமா நுட்பம் தெரிந்தவர்கள் குறை கூறினாலும், ஒரு பாமர ரசிகனுக்கு கண்டிப்பாக விருந்து தான்.
ரஜினிக்கு பிறகு நம்மை மிகவும் கவர்வது ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் தான், பாடல்கள் அனைத்தும் ரசிக்க வைக்கின்றன, அதிலும் ’எங்கே போகுது வானம்’, ‘மெதுவாக தான்’ போன்ற பாடல்கள் எல்லாம் ரஹ்மானின் மாஸ்டர் பீஸ், குறிப்பாக பின்னணி இசை ஹாலிவுட் தரத்தில் உள்ளது.
முதலில் ராணாவை கே.எஸ்.ரவிக்குமார் இயக்க இருந்து பின்பு அதை கைவிட்டதால், அதை தொடர்ந்து உருவான படம் தான் கோச்சடையான் என்று அனைவருக்கும் தெரியும். அதனால் இவரே இந்த படத்திற்கும் கதை, திரைக்கதை அமைத்தார், ரஜினி ரசிகனின் பல்ஸை தெரிந்து வைத்திருக்கும் இயக்குனர்களில் கண்டிப்பாக நம்பர் 1 இவர் தான், திரைக்கதை எந்த இடத்திலும் சோர்வு தட்டவில்லை, ரஜினிக்கே உண்டான ஸ்டைலில் கலக்கி எடுத்து இருக்கிறார்.
என்ன இது? எப்படி ரஜினியை அனிமேஷனில் பார்ப்பது என கவலைப்பட்டாலும், படம் முடிந்த பிறகு தலைவரை பார்த்து திருப்தி மட்டும் கண்டிப்பாக உங்களுக்குள் வரும், இந்த மோசன் கேப்சர் என்ற தொழில்நுட்பத்தை இந்தியாவிற்கு கொண்டு வந்து இயக்குனர் சௌந்தர்யாவை எழுந்து நின்று பாராட்டலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
0 comments:
Post a Comment