Monday, July 21, 2014

On Monday, July 21, 2014 by Unknown in , ,    
  






பல்லடம்  ஜூலை. 21–
பல்லடம் காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றுபவர் ஸ்டால்பின் (வயது 29). இளைஞர் காவல் படையை சேர்ந்தவர் சரவணன் (24). இவர்கள் நேற்று இரவு 4 ரோடு சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி வாகன தணிக்கை செய்தனர்.
அந்த மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரும் போலீஸ்காரர் ஸ்டால்பின், இளைஞர் காவல் படையை சேர்ந்த சரவணன் ஆகியோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திடீரென்று மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து போலீஸ்காரர் ஸ்டால்பினின் தோள் பட்டை மற்றும் கையில் குத்தினான்.
வலி தாங்க முடியாமல் ஸ்டால்பின் அலறினார். இதை அறிந்த பல்லடம் போலீசார் மோட்டார் சைக்கிளில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். போலீஸ்காரரை கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓட முயன்ற வாலிபர்களை விரட்டி சென்று பிடித்து கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் கோவை உக்கடம் பகுதியை சேர்ந்த பஷீர் (25), சேகர் (24) என்பது தெரிய வந்தது. அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

0 comments: