Monday, July 21, 2014
மக்கள்தொகை பெருக்கத்திற்கு ஏற்ப காலி பணியிடங்களை நிரப்ப வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநாடு கோரிக்கை
திருப்பூர், ஜூலை23-
மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப புதிய பணியிடங்களை உருவாக்கி, காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநாடு கோரியுள்ளது.திருப்பூரில் ஞாயிறன்று எப்.எம்.குத்புதீன் அரங்கத்தில் (ஹார்வி குமாரசாமி கல்யாண மண்டபம்) வருவாய்த்துறை அலுவலர் சங்க பொன்விழா ஆண்டு மாவட்ட மாநாடு நடைபெற்றது.
சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.சைபுதீன் தலைமை தாங்கினார். மத்திய செயற்குழு உறுப்பினர் ச.முருகதாஸ் வரவேற்றார். முன்னாள் மாநில அமைப்புச் செயலாளர் வி.டி.சுப்பிரமணியன் மாநாட்டைத் தொடங்கி வைத்துப் பேசினார். இதில் மாவட்டச் செயலாளர் ஜி.விஜயன் வேலை அறிக்கை முன்வைத்தார். மாவட்டப் பொருளாளர் எம்.கண்ணன் வரவு செலவு அறிக்கை முன்வைத்தார். இதன் மீது பிரதிநிதிகள் விவாதம் நடைபெற்றது.
இதையடுத்து நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: வருவாய்த்துறை அலுவலர்களுக்கு 30 சதவிகிதம் மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும், வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு இரவு காவலர், துப்புரவுப் பணியாளர் பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நிரப்ப வேண்டும், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியர் அலுவலகப் பிரிவிற்கு பயனாளிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய பணியிடங்கள் வழங்குவதுடன், தேவையான உபகரணங்கள் வழங்க வேண்டும், மாவட்ட மாறுதல் கோரியுள்ள விண்ணப்பங்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும், இரவு பகல் பாராது கடுமையாக தேர்தல் பணியாற்றிய வருவாய்த்துறை அலுவலர்களுக்கு இரண்டு மாத அடிப்படை ஊதியம் மற்றும் இதர படிகளை வழங்க வேண்டும், திருப்பூர் மாவட்டத்தில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்திற்கு கட்டட வசதி செய்து தர வேண்டும், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட்டு அனைவருக்கும் பயனளிப்பு ஓய்வூதியம் வழங்கும் நடைமுறையை தொடர வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை இம்மாநாடு வலியுறுத்தியது.
இம்மாநாட்டில், மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் த.பாரிவேல் ஆகியோர் பங்கேற்று, பணி ஓய்வு பெற்ற அலுவலர்களை பாராட்டி பொன்னாடை போர்த்தி சிறப்புச் செய்தனர்.
தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்றச் சங்கத்தின் மாவட்டத் தலைவர் அ.லோகநாதன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் து.ராஜகோபாலன், கிராம உதவியாளர் சங்க மாவட்டத் தலைவர் சுந்தர்ராஜ் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். நிறைவாக சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் கு.குமரேசன், மாநிலப் பொதுச் செயலாளர் த.சிவஜோதி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். நிறைவாக மாவட்ட இணைச் செயலாளர் அ.குமாரவேல் நன்றி கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி 14.7.16 சபரிநாதன் 9443086297 திருச்சி புறநகர் மாவட்டம் சார்பில் திருச்சி புறநகர் மாவட்ட கழக செயலாளர் கழக நாட...
-
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும். என முஸ்லிம் லீக...
-
சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையத்தில் உலக மண்வள தின விழா சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். வுளமான மண் இருந்தால் தான் நிலையான ம...
-
நடிகர் மனோபாலா தயாரிப்பில், திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக வெளியிட உள்ள படம் சதுரங்க வேட்டை. இப்படத்தின் டிரைலரை இளையதளபதி வி...
-
திருப்பூர் :குடியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி கேட்டு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில், திருப்பூரில் இன்று (24ம் தேத...
-
திருச்சி 14.4.16 சபரிநாதன் 9443086297 திருச்சியி ; ல் டாக்டர் . அம்பேத்கார் பிறந்த நாளை முன்னிட்டு அரிஸ்டோ ரவுண...
-
கத்தி படத்தின் பாடல்கள் செப்டம்பர் மாதம் வெளிவருகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார், தற்போது படத்தின் பாடல்கள் குறித்து தனுஷ் ஒரு ...
-
வேளச்சேரி திரவுபதி அம்மன் கோவில் தெருவில் திரவுபதி அம்மன் கோவிலில் தற்போது கோபுரம் கட்டும் பணி நடந்து வருகிறது. இதற்காக கோவிலை சுற்ற...
-
காமன்வெல்த் போட்டியில் பங்கேற்கும் இந்திய ஸ்குவாஷ் அணியினருடன் பயிற்சியாளர் சைரஸ் போஞ்சா, ஸ்காட்லாந்துக்கு செல்லாததால் வீரர், வீராங்கனைகள் ...
0 comments:
Post a Comment