Tuesday, July 22, 2014

On Tuesday, July 22, 2014 by Anonymous in    
காமன்வெல்த் போட்டியில் பங்கேற்கும் இந்திய ஸ்குவாஷ் அணியினருடன் பயிற்சியாளர் சைரஸ் போஞ்சா, ஸ்காட்லாந்துக்கு செல்லாததால் வீரர், வீராங்கனைகள் செய்வதறியாது திகைத்துள்ளனர். செüரவ் கோஷல் மற்றும் தீபிகா பல்லிகல் தலைமையிலான ஒன்பது பேர் கொண்ட ஸ்குவாஷ் அணி கிளாஸ்கோ புறப்பட்டு சென்றது. அவர்களுடன் மலேசியாவைச் சேர்ந்த பயிற்சியாளர் சுப்ரமணியன் சிங்காரவேலு, மகளிர் அணி பயிற்சியாளர் புவனேஸ்வரி குமாரி உள்ளிட்டோர் சென்றுள்ளனர். ஆனால், பத்து ஆண்டுகளுக்கும் மேலாக அணியின் பயிற்சியாளராக உள்ள சைரஸ் அணியினருடன் செல்லவில்லை. இது குறித்து துரோணாச்சாரியா விருது வென்ற அவர் கூறுகையில் "என்ன நடந்தது எனத் தெரியவில்லை. எந்த கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை. தாமதமாக ஸ்காட்லாந்து செல்வேனா என்பதும் தெரியாது. மொத்தத்தில் அணியினருடன் இல்லாதது வருத்தம் அளிக்கிறது' என்றார். "பயிற்சியாளர் சைரஸ் எங்களுடன் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அவருக்கும், எங்களுக்கும் இடையிலான உறவு சிறப்பாக இருந்தது. நாங்கள் அவரை "மிஸ்' செய்கிறோம்' என வீரர்கள் தெரிவித்தனர். இதற்கு இந்திய ஸ்குவாஷ் கூட்டமைப்பு செயலாளர் ஸ்ரீவத்ஸன் பதிலளிக்கையில் "ஸ்குவாஷ் கூட்டமைப்பின் செலவில் சைரஸ் விரைவில் கிளாஸ்கோ செல்வார், அரசு செலவில் அல்ல' என்றார்.

0 comments: