Tuesday, July 22, 2014

On Tuesday, July 22, 2014 by Anonymous in    
"கிரிக்கெட்டைப் போல இந்திய ஹாக்கி அணி சொந்த மண்ணில் சிறப்பாக செயல்படுகிறது. வெளி நாடுகளிலும் சவால்களை எதிர் கொண்டால் இந்திய அணியால் சாதிக்க முடியும்' என ஆஸ்திரேலியா முன்னாள் ஹாக்கி ஜாம்பவான் ஜேமி வேயர் தெரிவித்தார். ஐந்து முறை உலகின் சிறந்த ஹாக்கி வீரர் விருதை வென்ற ஜேமி வேயர் கூறியது: கிரிக்கெட் அணியைப் போல இந்திய ஹாக்கி அணி சொந்த மண்ணில் சிறப்பாக ஆடுகிறது. ஆனால், வெளிநாடுகள் என்று வரும்போது தடுமாறுகின்றனர். வெளிநாட்டில் வானிலை, ஆடுகளம், உணவு என எல்லாமே மாறுபட்டு இருக்கும். இந்த சவால்களை எல்லாம் எதிர்கொண்டு முழு சக்தியை வெளிப்படுத்த வேண்டும். இந்திய அணி முழுத் திறமையையும் வெளிப்படுத்தினால், நிச்சயம் இறுதிச் சுற்றுக்கு முன்னேறும். இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறவது உறுதி. அதற்கு மேல் நடப்பதை இப்போது கணிக்க முடியாது. கடந்த காமன்வெல்த் போட்டி இறுதிச் சுற்றில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி சிறப்பாகவே விளையாடியது. அதிர்ஷ்டவசமாக ஆஸ்திரேலியா அதிக கோல்கள் (8-0) அடித்தது. கடந்தமுறையுடன் ஒப்பிடும்போது தற்போதைய இந்திய அணியில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் முடிந்த உலகக் கோப்பையில் நாங்கள், இறுதிச் சுற்றில் 6-1 என நெதர்லாந்தை வீழ்த்தினோம். ஆனால் இந்திய அணிக்கு எதிராக 4-0 என்ற கோல் கணக்கில்தான் வெற்றிபெற முடிந்தது. இந்திய அணி சிறந்த அணிதான். ஆனால், உலகின் சிறந்த அணி என்பதை நிரூபிக்க இன்னும் முன்னேற்றம் அடைய வேண்டும் என அவர் தெரிவித்தார்

0 comments: