Tuesday, July 22, 2014

On Tuesday, July 22, 2014 by Anonymous in    
mundasupatti001
தமிழ்நாட்டில் கிராம நன்மைக்காகவும் மக்கள் நலனுக்காகவும் மனிதர்களால் உருவாக்கப்பட்டது தான் இந்த மூடநம்பிக்கைகள், இன்றளவும் சில கிராமங்களில் கடைபிடிக்க படுகிறது.
தலையில் தேங்காய் உடைப்பது கழுதைக்கும் கழுதைக்கும் கல்யாணம் செய்து வைப்பது போன்ற விநோதமான மூட நம்பிக்கையில் மக்கள் எவ்வாறு மூழ்கிப் போயுள்ளனர் என்பதை கொஞ்சம் காதல் நிறைய காமெடி, கொஞ்சம் சாமி, நிறைய த்ரில்லிங் என்று பல்சுவையாக கலந்து வந்துருக்கும் படம் இந்த முண்டாசுபட்டி.
ஏற்கனவே குறும் படமாக வந்து இணையதளத்தில் கலக்கிய படம் தற்போது முழு பொழுதுபோக்கு அம்சமாக வந்து உள்ளது
கதை என்ன ?
1947 பிரிட்டிஷ் காலத்தில் ஒரு வெள்ளையன் முண்டாசுபட்டி பட்டி கிராமத்துக்கு சென்று அங்கு உள்ள கிராம மக்களை தன்னுடைய கேமரா முலம் படம் பிடிக்கிறான், அவன் எதற்சையாக படம் பிடிக்க அதற்கு பிறகு அங்கு வாழும் சில மக்கள் நோய் வாய் பட்டு இறக்கிறாகள். இந்த வெள்ளையன் புகை படம் பிடித்ததால் தான் மக்கள் இறக்கிறார்கள் என்று நம்புகின்றனர்,
இந்த நிலையில் ஊரில் எல்லோரும் சாக கிடக்க அந்த ஊரில் ஒரு அதிசய கல் வானத்தில் இருந்து விழுகிறது.அந்த கல் விழுந்த நேரம் ஊரில் எல்லாம் நன்மையாக நடக்க, அந்த கல்லை சாமியாக வணங்குகிறார்கள் அந்த மக்கள், ஆனால் அதே வெள்ளையன் சாமியாக வணங்கும் அந்த கல்லில் ஒரு அதிசய வைர கற்கள் இருக்கிறது என்று கண்டுபிடிக்கிறான்.
பிறகு காலங்கள் கடக்க பக்கத்து ஊரான சத்தியமங்களத்தில் ஹாலிவுட் போட்டோ கடை வச்சுருக்காரு ஹீரோ விஷ்ணு (கோபி) அவருக்கு அசிஸ்டெண்ட்டா இருக்காரு காளி (அழகுமணி).
முண்டாசுப்பட்டி ஊர் தலைவரோட அப்பா செத்து போயிடுறாரு (செத்ததுக்கு அப்புறம் தான் அந்த ஊர்ல போட்டோவே எடுப்பாங்க) அவர போட்டோ எடுக்க போற விஷ்ணுவுக்கு ஊர் தலைவர் கஜராஜின் மகள் நந்திதா கலைவானி) மீது காதல்.
போட்டோவ சரியா எடுக்காததால கோபியையும், அழகுமணியையும் தண்ணி வர வரைக்கும் கிணறு வெட்டுமாறு கட்டளை போடுகிறார் ஊர்தலைவர். ஒருபுறம் கலைவானிக்கு அவங்க மாமா பையன் கூட கல்யாணம் பண்ண முடிவு செய்கிறார் கலைவானியின் அப்பா. கோபி கலைவானி காதல் கல்யாணமாக மாற கோபி செய்த சதி வேலை என்ன என்பது படத்தின் ஃக்ளைமேக்ஸ்.
நடிகர், நடிகைகளின் நடிப்பு
விஷ்ணு
எப்பொழுதும் வித்தியாசத்தை விரும்பும் விஷ்ணு, இந்த தடவையும் வித்தியாசமான கதை களத்துடன் களமிறங்கி இருக்கிறார். சிறப்பான நடிப்பு, ரொம்பவும் சிரமப்படாமல் அசால்ட்டாக நடித்துள்ளார்.
காளி
இதே குறும்படத்தில் ஹீரோவாக நடித்து இதில் ஹீரோவுக்கு நண்பனாக நடித்து உள்ளார். அவர் பேசும் ஒவ்வொறு வசனுமும் செம டைமிங். பல இடங்களில் கைதட்டல்களை அள்ளுகிறார்.
நந்திதா
யதார்த்தமான நடிப்பு, அடுத்த வீட்டுப்பெண் போன்ற அழகி நந்திதா. தனியாக வரும் சில ஷாட்களில் மிகவும் அழகாகக் காட்டியிருக்கிறார்கள். ஒரு கிராமத்துப்பெண்ணாக, கேமிராவுக்குப் பயப்படுபவராக நல்ல நடிப்பு.
முனீஸ்காந்த்
படத்தின் மிகப்பெரிய தூண் என்றால் அது இவர் தான் சாதாரணமாக அறிமுகம் ஆகி, போகப் போக படத்தையே தன் கண்ட்ரோலில் கொண்டுவந்துவிடுகிறார். ‘அவர் பேசும் ஒவ்வொறு வசனமும் வயிற்றை பதம் பார்ப்பது உறுதி, பிணத்துக்கு பினாமியாக வந்து அந்த பிணம் போட்டோ முன்னாடியே அழுது புரல்வது போட்டோ மட்டும் என் போட்டோ.ஆனால் படையல் ரத்தக்கறி எனக்குக் கிடையாதா?’ என பொங்கும்போது செம காமெடி. ’துருப்பிடிச்ச துப்பாக்கி….துப்பாக்கி கலாச்சாரம்’ என வசனங்களிலும் கமல்-ரஜினிக்கு செய்வினை வைக்கும் சினிமா வெறியிலும் மனிதர் பின்னுகிறார். அவர் நடிப்பை பார்த்து ஆனந்த் ராஜ் விட்டு நாய் செத்துபோவது செம.
பலம்
எந்த ஒரே இடத்திலும் போர் அடிக்காத திரைக்கதை அமைப்பு, மூடநம்பிக்கையை புத்திசாலித்தனமான புரிய வைத்து போன்ற காட்சிகள், வாய் மூடி பேசவும் பட இசையமைப்பாளர் ஷான் ரோல்டனின் இசையில் முத்தமிழின் பாடல்கள். ராசா மகாராசா பாடல் சூப்பரோ சூப்பர். முனீஸ்காந்த், காளி போன்றவர்களின் பங்களிப்பு பலம்.
பலவீனம்
பெரிசா ஒன்னும் இல்லை, இருந்தாலும் பின்னணி இசை சில இடங்களில் ஒத்து போகவில்லை, நந்திதாவுக்கு அப்பாவாக வரும் கதாபாத்திரம் அவ்வளவு அழுத்தமாக இல்லை (ஊரு தலைவர்னு சொல்றாங்க அதனாலே பெரிசா எதிர்பார்த்தோம்
அறிமுக இயக்குனர் ராம் முதல் படத்திலே நான் ஒரு வித்தியாசமான படைப்பாளி என்று நிரூபித்து உள்ளார்.மூட நம்பிக்கையும் முட்டாள் ஜனங்களும் எந்த அளவு இருக்கிறது என்று ஆணி அடிச்சது போல் சில காட்சிகளில் சொல்லி நம் பாராட்டுக்களை பெறுகிறார், தயாரிப்பாளர் சிவி குமார் கண்டுபிடிப்பு ஆச்சே தப்பாதே.
மொத்தத்தில் முண்டாசுபட்டி – மூடநம்பிக்கையின் கலகலப்பு

0 comments: