Thursday, July 24, 2014

On Thursday, July 24, 2014 by Anonymous in    


அஞ்சான் படத்தின் பாடல் வெளியீட்டு விழா மிகவும் கோலாகலமாக நடத்த படக்குழுவினர் முடிவு செய்தனர். ஆனால் பின் ஏற்பட்ட சில பிரச்சனைகளால் இசை வெளியீடு மற்றும் டிரைலர் திரையீடு சத்ததே இல்லாமல் நேற்று நடைபெற்றது.இப்படத்தின் பாடல் உருவான விதத்தைப் பற்றி இயக்குனர், இசையமைப்பாளர் என எல்லோரும் பேசி முடித்தனர்.பின் படத்தில் நடித்த சூரி பேசும் போது, நான் இந்த படத்தில் ஒரு டாக்சி டிரைவரா நடிச்சிருக்கேன். சூர்யா மும்பைக்கு முதன் முதலாக வந்து இறங்கும் போது, அவர் என்னைதான் முதல்ல சந்திப்பாரு என பேச தொடங்கினார்.அப்போது அங்கிருந்த சூர்யா ரசிகர்கள் கோபத்துடன் கதையை சொல்லாதீர்கள் என்று கத்தி உள்ளனர். அதற்கு சூரியும் நான் சொன்னால் மட்டும் உங்களுக்கு புரிய போகிறதா என்ன என்று நக்கலாக பதில் கூறியிருக்கிறார்.இதனால் சூரி மேல் சூர்யா ரசிகர்கள் மிகவும் சூடாகி உள்ளனர்




0 comments: