Thursday, July 24, 2014

On Thursday, July 24, 2014 by Anonymous in    






ஆயிரம் கைகள் தடுத்தாலும் ஆதவன் மறைவதில்லை, என்ற வார்த்தைக்கு நிகராக சினிமா உலகத்தில் ஆயிரம் தடைகளை தாண்டி சுட்டெரிக்கும் சூரியனாக நேருக்கு நேரில் அறிமுகமானார் சூர்யா. அன்றிலிருந்து இன்று வரை ஒளி மங்காமல் ஜொலித்துக் கொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் பல பேர், பல கருத்துகளை இவர் மீது திணித்தாலும் தனக்கு என்ன வருமோ, அதை மட்டும் செய்துக் கொண்டிருந்த இந்த வெற்றிக்குதிரையில் கடிவாளத்தை அவிழ்த்து எறிந்தவர் இயக்குனர் பாலா. இவரின் பார்வை நந்தாவாக சூர்யா மீது விழுந்ததால் தான், இவரின் திரைப்பயணம் அடுத்தக்கட்டத்திற்கு சென்றது, ரசிகர் பலமும் அதிகமாகியது.இந்த ரசிகர் படை இன்றும் குறையாமல் இவருக்கு ஆதரவாக சிங்கமாக கர்ஜித்துக் கொண்டிருக்கின்றனர். எதற்கும் அஞ்சாதவானாக, தமிழ் திரையுலகில் வாரணம் ஆயிரம் சூடி, இன்று முடி சூட மன்னனாக திகழ்கிறார்.சினிமா நடிகன் என்றாலே கூத்து, கும்மாளம் என்று சொல்லப்படும் இந்த சமுதாயத்தில் , தனக்கென்று ஒரு குறுகிய வட்டம் அமைத்து அதில் ஒழுக்கமாக வாழும் நடிகர்களுக்கெல்லாம் இவர் ஒரு முன்னோடி. தான் சம்பாதிக்கும் பணத்தை தேவையில்லாத ஆடம்பர செலவு செய்யாமல் நாளை ‘சிகரம்’ தொடும் என்னும் இளைஞர்களின் எண்ணங்களை ‘அகரம்’ வாயிலாக நிகழ்த்திக்காட்டியவர்.யாருக்கும் புரியாத ‘பிதாமகனாக’ இருந்த இவரின் வாழ்க்கையில் சில்லென்று தோன்றியது ஜோதிகாவுடன் காதல், இந்த காதல் பின் திருமணமாகி இன்று குடும்ப வாழ்க்கையிலும் மிஸ்டர்.பெர்ஃபெக்ட்டாக இருந்து வருகிறார்.ஆறு போல் இன்னல்கள் வந்தாலும் அஞ்சானாக அதை வென்று எட்டாத உயரத்தில் இருக்கும் சூர்யாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்வதில் ‘சினி உலகம்’ பெருமையடைகிறது


0 comments: