Saturday, August 30, 2014

On Saturday, August 30, 2014 by Unknown in ,    
கான்பூர்: உத்தர பிரதேச மாநிலத்தில் பள்ளிக்கு செல்போன் எடுத்துச் சென்றதால் தண்டனை என்ற பெயரில் ஆடையை அவிழ்த்துவிட்டு 2 மணிநேரம் நிற்க வைத்ததால் 12 வயது மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். உத்தர பிரதேச மாநிலம் பிஜ்னார் மாவட்டத்தில் உள்ள நாசியாபாத்தில் இருக்கும் பள்ளியில் 12 வயது சிறுமி ஒருவர் 6வது வகுப்பு படித்து வந்தார்.
பள்ளியில் நடந்த சோதனையில் சிறுமியின் பையில் செல்போன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ஆசிரியை ஒருவர் சிறுமிக்கு தண்டனை கொடுத்துள்ளார். அதாவது சிறுமியின் ஆடைகளை அவிழ்க்க வைத்து அவரை அப்படியே 2 மணிநேரமாக வகுப்பறையில் நிற்க வைத்துள்ளார். இதனால் அவமானம் அடைந்த சிறுமி பள்ளி முடிந்ததும் வீட்டுக்கு சென்றுள்ளார். வீட்டை அடைந்த அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் அந்த ஆசிரியையை உடனே கைது செய்யக் கோரி பள்ளி முன்பு போராட்டம் நடத்தினர். இதற்கிடையே தண்டனை கொடுத்த ஆசிரியை தலைமறைவாகிவிட்டார்.
இது குறித்து தகவல் அறிந்த எஸ்.பி. எம்.பி. வர்மா பள்ளிக்கு சென்று சிறுமியின் பெற்றோரை சமாதானப்படுத்தினார். மேலும் அந்த ஆசிரியை மீது வழக்குப்பதிவு செய்ய அவர் உத்தரவிட்டார். இந்தியாவில் இதுபோன்ற பெண்களுக்கு எதிரான பல காரியங்கள் நடைபெற்று வருகிறது. ஒரு மாணவியை இவ்வாறு செய்ய ஆசிரியர் ஒருவருக்கு எவ்வாறு மனசு வந்தது என்று தெரியவில்லை.

0 comments: