Saturday, August 16, 2014

On Saturday, August 16, 2014 by farook press in ,    
திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் பள்ளியில், 4 பள்ளிகளை சேர்ந்த 2308  மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடந்தது. விழாவில் ஜெய்வாபாய் பள்ளி, நஞ்சப்பா பள்ளி, அய்யங்க்காளிபாளையம் மேல்நிலைப்பள்ளி, அனுப்பர்பாளையம் அரசுப்பள்ளி ஆகிய பள்ளி மாணவர்களுக்கு,  ரூ. 85.31 லட்சம் மதிப்பிலான சைக்கிள்களை வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் வழங்கி சிறப்புரையாற்றினார்.
அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசியதாவது:-
தமிழக முதல்வர்  அவர்கள் தமிழகத்தை முன்னோடி மாநிலமாக்க அயராது பாடுபட்டு வருகிறார். எந்த மாநிலத்திலும் இல்லாத அளவில் கல்விக்காக 17 ஆயிரம் கோடி ஒதுக்கி பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். பள்ளி சேர்ந்தது முதல்  வரை அனைத்து உதவிகளையும் அம்மா செய்து வருகிறார்,
 விலையில்லா  நோட்டுப்புத்தகம், பேனா, பென்சில், என 14 வகை பொருட்களை வழங்கி வருகிறார். 
 மேலும் மாணவ-மாணவிகளுக்கு விலையிலா சைக்கிள்கள், மடிக்கணினியும் வழங்கி தமிழகம் கல்வித்துறையில் முதன்மை மாநிலமாக உருவாக தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அம்மா அளித்துள்ள வசதிகளை பயன் படுத்தி நீங்கள் நல்லபடியாக படித்து முன்னேற வேண்டும்.
 இவ்வாறு அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசினார்.
விழாவில்  முதன்மை கல்வி அலுவலர் முருகன் வரவேற்றார். திருப்பூர் துணை மேயர் சு.குணசேகரன், மாவட்ட ஊராட்சி தலைவர் எம். சண்முகம்,துணை தலைவர் ஆனந்த குமார், ஒன்றிய தலைவர்  சாமிநாதன்,மண்டல தலைவர்கள் ராதாகிருஷ்ணன்,  ஜான்,முத்துசாமி, கிருத்திகா சோமசுந்தரம், நிலைக்குழு தலைவ்வர் அன்பகம் திருப்பதி, கவுன்சிலர்கள் கே.என்.விஜயகுமார், கீதா, சுப்பிரமணியம், மாவட்ட கல்வி அலுவலர் கரோலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.





0 comments: