Saturday, August 16, 2014
திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க., அம்மா பேரவையின் சார்பில் 'மக்கள் முகாம்- பேரணி' நடந்தது. திருப்பூர் சந்தைப்பேட்டையில் துவங்கிய இந்த பேரணியில் தமிழக வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் 500க்கும் மேற்பட்டோர் திரண்டு பேரணியாக வந்தனர். சந்தைப்பேட்டை, அங்கிருந்த மார்க்கெட், கடைகள் , பாதசாரிகளிடம், சாதனை விளக்க நோட்டீஸ்களை வழங்கினார்கள் சுமார் 2 கி., மீ. தூரம் பேரணியாக சென்று தட்டன்தோட்டம் பகுதியில் தெருமுனை கூட்டம் நடந்தது.
கூட்டத்துக்கு குட்டி தங்கவேல் தலைமை தாங்கினார். மண்டல தலைவர் ராதாகிருஷ்ணன் பேசினார். கூட்டத்தில் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசும்போது கூறியதாவது:
தமிழக முதல்வரின் 3 ஆண்டு கால சரித்திர சாதனை திட்டங்களை மக்கள் வசிக்கும் பகுதிகளில் நேரில்கொண்டு சென்று அவரகளுக்கு விளக்கிடும் வகையில் தெருமுனை கூட்டங்கள் மூலமாகவும், துண்டு பிரசுரங்கள் மூலமாகவும் அவர்களுக்கு விளக்கிடும் வகையிலும், மேலும் இது போன்ற கூட்டங்கள் நடத்துவது மூலம் மக்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு, கடந்த 3 ஆண்டுகலல் எத்தனை திட்டங்களை மக்களுக்கு அம்மா வழங்கினார் என்பதை மக்கள் மறந்திருக்க மாட்டர்கள். தேர்தலில் மக்களிடம் கொடுத்த 54 வாக்குறுதிகளை நிறைவேற்றியும், சட்டமன்ற கூட் டத்தொடரில் 110 விதியின் கீழ் அறிவிக்கும் பல்வேறு திட்டங்களையும் முழுமையாக நிறைவேற்றி எதிர்கட்சி தலைவர்களும் பாராட்டும் வகையிலும்,இந்தியாவில் எந்த மாநில முதலமைச்சர்களும் செய்திராத சாதனைகள செய்து நல்லாட்சி நடத்தி வருபவர் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஒருவர் மட்டும்தான்.
உணவுக்கு உத்திரவாதம் அளிக்கும் வகையில் பாக்கெட்டில் ரூ.5 இருந்தால் போதும் அம்மா உணவகம் சென்று வயிறார இட்லி சாப்பிட்டு வரலாம்.ரூ.8 இருந்தால் சாம்பார் சாதமும், தயிர் சாதமும் சாப்பிட்டு வரலாம்.அதேபோல் ரூ.10 க்கு அம்மா குடிநீர் பாட்டில், அம்மா உப்பு என மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் காய்கறி விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் நேரடியாக கொள்முதல் செய்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.20 சதவீதம் தள்ளுபடியில் அம்மா மருந்தகங்கள். தமிழக மக்களின் உரிமை மற்றும் ஜீவாதார பிரச்சனைகளுக்கு நீதிமன்றம் சென்று போராடி மீட்டுத்தந்துள்ளார்.மக்களின் குறைகளை போக்கும் வகையில் மக்கள் மீது அக்கறை கொண்டு அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் வகையில் இந்தியாவில் முதன்மை முதலமைச்சராக திகழ்கிறார்.
இவ்வாறு அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசினார்.
இந்த கூட்டத்தில் துணை மேயர் சு.குணசேகரன், மண்டல தலைவர்கள் ஜான், முத்துசாமி, கிருத்திகா சோமசுந்தரம், கண்ணப்பன், கருவம்பாளையம் மணி, அணி செயலாளர்கள் அன்பகம் திருப்பதி, ஸ்டீபன்ராஜ், சீனியம்மாள், கே.என்.சுப்பிரமணியம், கட்சி நிர்வாகிகள் அட்லஸ் லோகநாதன், உஷா ரவிக்குமார், எஸ்.பி.என்.பழனிசாமி கருணாகரன், வேலம்பாளையம் அய்யாசாமி, வி.கே.பி.மணி, தம்பி மனோகரன், கலைமகள் கோபால், பி.கே.முத்து கவுன்சிலர்கள் சண்முகசுந்தரம், கீதா, நஜ்முதேன்,ராஜேஷ் கண்ணா,கோகுல், சடையப்பன், கண்ணபிரான், ஷாஜகான், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...
-
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர் திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர்...
-
திருச்சி முசிறி முசிறி அருகே தா.பேட்டை சலவைத் தொழிலாளர் சங்கத்தினர் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக 1200 நபர்களுக்கு இலவசமாக முக கவசங...
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
பெரம்பூர், செப். 13– கொடுங்கையூர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி பத்மாவதி (23). இவர் நேற்று இரவு வீட்டின் அருகே ந...











0 comments:
Post a Comment