Wednesday, August 13, 2014
On Wednesday, August 13, 2014 by farook press in Break, திருப்பூர்
ஊத்துக்குளியில் கல்விக் கடன் தராமல் மாணவரை அலைக்கழிக்கும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி நிர்வாகத்தைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வெள்ளியன்று ஊத்துக்குளி இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளை முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளானோர் கலந்து கொண்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊத்துக்குளி ஒன்றியச் செயலாளர் ஆர்.குமார் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கல்வி கடன் கேட்டு விஸ்வப்பிரியா என்ற மாணவி கடந்த 2013ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் விண்ணப்பித்துள்ளார். இவருக்கு தகுந்த பதில் அளிக்காமல் பல மாத காலமாக அவ்வங்கி மேலாளர் அலைக்கழித்துள்ளார். இந்நிலையில் அக்டோபர் மாதம் 5ஆம் தேதி தகவல் உரிமைச் சட்டத்தில் தகவல் கோரிய பின்பு விஸ்வப்பிரியாவின் தாயாரை அழைத்து, முன்பே கடன் தர முடியாது என்று கூறிவிட்டதாக, ஒரு கடிதத்தை அவர் கையில் தந்து விட்டனர். இதனால் அம்மாணவியின் கல்விக்கு போதுமான பணம் இல்லாத காரணத்தால் கந்து வட்டிக்கு கடன் வாங்கி படிக்க வைக்கும் அவலநிலை ஏற்ப்பட்டுள்ளது.
வங்கி நிர்வாகத்தின் இந்தப் போக்கைக் கண்டித்தும், கல்வி கடன் கேட்டு வருபவருக்கு விண்ணப்பம் வழங்கும்ப்படியும், விஸ்வப்பிரியாவின் மனுவை பரிசீலித்து விரைவாக கல்வி கடன் வழங்குமாறும், அரசு பிறப்பித்துள்ள சட்டத்தின் அடிப்படையில் எந்த நிபந்தனையுமின்றி கல்வி கடன் வழங்க கோரியும் ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. அதைத் தொடர்ந்து கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர் ஆ.மேகநாதன் உரையாற்றினார். இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநிலத் தலைவர் எஸ்.முத்துக்கண்ணன் சிறப்புறை ஆற்றினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் முடிவில் வங்கி நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. வங்கி தலைமை மேலாளர் நடேசன், இன்னும் பதினைந்து நாட்களுக்குள் மாணவி விஸ்வபிரியாவுக்கு கல்வி கடன் வழங்க ஏற்பாடு செய்து தருவதாக உறுதியளித்தார்.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஈரோட்டில் 80 கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்க...
-
மாவட்டத் தலைநகரமாக உயர்ந்துள்ள திருப்பூரில் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்குவதுடன், மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையை பன்னோக்கு சிறப்பு (மல...
-
திருச்சியில் அதிமுக சார்பில் மக்களின் முதல்வர் ஜெயலலிதா 67 பிறந்த நாளை முன்னிட்டும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் கருமண்டபத்தில...
-
அரசு மேல்நிலைப் பள்ளி கண்ணுடையான் பட்டியில் பயிலும் மாணவர்களுக்கு 1 லட்சம் ௹பாய மதிப்பிலான அரிசி மற்றும் மளிகைப் பொருட்கள் அப்பள்ளி...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில், கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி காலேஜ் ரோட்டில் ...
-
திருப்பூர் காங்கயம் ரோடு செயின்ட் ஜோசப் பெண்கள் கல்லூரியில் நிர்வாகவியல் துறை சார்பில் விற்பனை கண்காட்சி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் சவுரி...