Thursday, August 14, 2014

On Thursday, August 14, 2014 by Unknown in ,    
மதுரை : ஆக்ஸிஜன் இன்றி நீலநிறமான குறைமாத குழந்தைக்கு, மதுரை வடமலையான் மருத்துவமனையில் அரியவகை இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

டாக்டர் பி.ஆர்.ஜெ., கண்ணன், பச்சிளம் சிசு சிறப்பு டாக்டர் வினோத் கூறியதாவது: கர்ப்பத்தின் போது சர்க்கரை நோய் பாதிப்பு மற்றும் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட திருச்சி பெண்ணுக்கு 1.3 கிலோ எடையுள்ள ஆண் குழந்தை பிறந்தது. ஆக்ஸிஜன் இல்லாத ரத்தம் குழந்தையின் உடலில் பாய்ந்ததால் நீலநிறமானது. உடலின் எடை குறைந்தநிலையில் (990 கிராம்) வடமலையான் மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். பரிசோதித்தபோது, இருதய நான்கு அறைகளில் இடதுபக்க அறையில், நுரையீரலில் இருந்து இருதயத்திற்கு செல்லும் ரத்தக்குழாய் அடைபட்டிருந்தது. இதனால் ரத்தத்தில் ஆக்ஸிஜன் கலக்காமல், கெட்ட ரத்தம் குழந்தையின் உடலுக்கு சென்றது.

குழந்தையின் எடை ஒரு கிலோ அளவு கூட இல்லாததால், வழக்கமான கருவிகளைக் கொண்டு, சிகிச்சை அளிக்க முடியவில்லை. நரம்பை கண்டுபிடிப்பதே கடினமாக இருந்தது. தொடையின் ரத்தக்குழாய் வழியாக, 'ஆஞ்சியோபிளாஸ்டி' முறையில் பலுான் சிகிச்சை செய்து, ரத்தக்குழாய் திறப்பு சரிசெய்யப்பட்டது. 4 மாத கண்காணிப்புக்குப் பின், அக்குழந்தை 5 கிலோ எடையில், நன்றாக உள்ளது. இனி குழந்தைக்கு ரத்தக்குழாய் அடைப்பு வர 90 சதவீதம் வாய்ப்பில்லை. 10 சதவீதத்தில் மீண்டும் அடைப்பு ஏற்பட்டாலும் பிரச்னையில்லை. இந்தியாவில் எடை குறைவான குழந்தைக்கு இரண்டாவது முறையாக, இம்மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடந்துள்ளது, என்றனர்.Displaying NEWS3 VADAMALAIYAAN.JPG

0 comments: