Thursday, August 07, 2014
On Thursday, August 07, 2014 by Anonymous in News
தமிழ் திரையுலகையும், தமிழக அரசியலையும் என்றும் பிரிக்க முடியாது. இந்நிலையில் தமிழக முதல்வர் செல்வி.ஜெயலலிதா அவர்களை அவதூறாக பேசி இலங்கை இணையதளத்தில் கட்டுரை வெளியிட்டதால் தமிழகமே கொதித்து போய் உள்ளது.
இதற்கு தங்கள் எதிர்ப்பை காட்டும் விதத்தில் தமிழ் திரையுலகத்தினர் நேற்று இலங்கை தூதரகத்தை மூடக்கோரி போராட்டம் நடத்தினர். இதில் நடிகர்கள் விஜய், சூர்யா, ஜீவா மற்றும் இயக்குனர்களில் கே.எஸ்.ரவிக்குமார், முருகதாஸ், பார்த்திபன், சீமான் போன்று பலர் கலந்து கொண்டனர்.
பெரிதும் எதிர்பார்த்த ரஜினிகாந்த் வராதது அனைவருக்கும் மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியது, இதேபோல் கமலும் வரவில்லை, அஜித் பற்றி சொல்லவே தேவையில்லை. ஆனால் இதற்கு என்ன காரணம் என்பது யாருக்கும் தெரியாமலே இருந்து வருகிறது.
இது பற்றி நெருங்கிய வட்டாரங்களை விசாரித்தால் ரஜினி லிங்கா படத்திலும், கமல் உத்தம் வில்லன் படத்திலும் பிஸியாக இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.
இதே போல் சென்ற வருடம் இலங்கைக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டத்தின் போது, அவர்களுக்கு ஆதரவு தரும் நோக்கத்தில் தமிழ் திரையுலகம் உண்ணாவிரத போராட்டம் நடத்தியது.
இதில் அஜித் காலையிலிருந்து போராட்டம் முடியும் வரை கலந்து கொண்டார், ஆனால் நேற்றைய போராட்டத்தில் இவர் ஏன் கலந்து கொள்ளவில்லை என்று தெரியவில்லை.
பெரும்பாலும் ஈழத்து மக்கள் பிரச்சனை என்றால் கண்டிப்பாக அனைவரும் கலந்து கொள்வார்கள், ஆனால் இது தனி மனிதருக்கான நிகழ்வு என்பதால் தவிர்த்து இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
