Thursday, August 07, 2014

On Thursday, August 07, 2014 by Anonymous in
kathai_irumbu_salim001








தமிழ் சினிமாவில் இப்போதெல்லாம் படங்களுக்கு பஞ்சமே இல்லை. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஏதாவது ஒரு படம் வெளியாகிறது. ஒரு சில நேரங்களில் 3 அல்லது 4 படங்கள் ஒரே நாளில் வெளியாவது உண்டு.
அதேபோல் தான் ஆகஸ்ட் 29ம் தேதி 3 படங்கள் வெளிவந்து மோத இருக்கின்றன.
பார்த்திபன் இயக்கத்தில் சந்தோஷ், அகிலா கிஷோர், தம்பிராமையா மற்றும் பலர் நடித்திருக்கும் படம் ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’.
இப்படம் ஆகஸ்ட் 1ம் தேதி ரிலீஸ் ஆவதாக இருந்து பின்பு ஆகஸ்ட் 29க்கு தள்ளிவைக்கப்பட்டது.
யுவராஜ் போஸ் இயக்கத்தில் அதர்வா, ப்ரியா ஆனந்த், லட்சுமி ராய் ஆகியோர் நடித்திருக்கும் படம் இரும்புகுதிரை. இப்படமும் 29ம் தேதி வெளிவரவுள்ளது.
அதேபோல் நிர்மல் குமார் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, அக்ஷா ஆகியோர் நடித்திருக்கும் படம் ‘சலீம்’. விஜய் ஆண்டனி இசையமைத்து, தயாரித்திருக்கும் இப்படமும் 29ம் தேதியே வெளிவரவுள்ளது.
இம்மூன்று படங்களும் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பில் இருக்கும் படங்கள். ஆகவே எந்த படம் வெற்றி பெரும் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.