Friday, August 15, 2014

On Friday, August 15, 2014 by farook press in ,    
ஊத்துக்குளி வக்கீல்கள் சங்கத்தின் சார்பில் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அனுப்பி உள்ள கோரிக்கை கடிதத்தில்கூறியிருப்பதாவது:திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியை தலைமையிடமாக கொண்டு தனித் தாலுகா தமிழக அரசால் உருவாக்கப்பட்டு செயல்டுகிறது.    இதற்கு முன்பு ஊத்துக்குளி பகுதி பெருந்துறை தாலுகா, ஈரோடு மாவட்டத்தில் இருந்து வந்தது.      அதன் பின்பு திருப்பூர் மாவட்டம் உருவாக்கப்பட்டபோது,     அவினாசி தாலுகாவுடன் ஊத்துக்குளி தாலுகா இணைக்கப்பட்டது.    ஊத்துக்குளி தாலுகா பகுதி வழக்குகள்    அவினாசியில்    உள்ள மாவட்ட உரிமையியல் நடுவர் மன்றத்திலும்,   குற்றவியல் நடுவர் மன்றத்திலும் விசாரிக்கப்பட்டு வருகின்றன. 
அதேபோல் சார்பு நீதிமன்றத்திற்கு உட்பட்ட வழக்குகள் திருப்பூரில் உள்ள சார்பு நீதிமன்றத்திலும் விசாரிக்கப்பட்டு வருகிறது.   ஊத்துக்குளி தாலுகா பகுதி மக்கள் உரிமையியல் நீதிமன்றம் மற்றும் குற்றவியல் நீதிமன்றம் ஆகியவைகளுக்கு சுமார் 30 கி.மீ., தொலைவிற்கு செல்ல உள்ள வேண்டியுள்ளது. ஊத்துக்குளி தாலுகா பகுதி 49 வருவாய் கிராமங்களை உள்ளடக்கியது.   அதில் 37 கிராம பஞ்சாயத்துகள் மற்றும் 2 பேரூராட்சி பகுதிகள் அடங்கும். 
ஆகவே ஊத்துக்குளியில் ஒரு மாவட்ட உரிமையியல் நீதிமன்றமும் மற்றும் ஒரு குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தையும் அமைத்து கொடுக்கும்படி கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது

0 comments: