Friday, August 15, 2014

On Friday, August 15, 2014 by farook press in ,    
தாராபுரத்தில் ஏலம் எடுத்து பல மாதங்களாகியும் முன்வைப்பு தொகை செலுத்தாததால்ஏழு கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
தாராபுரம் நகராட்சிக்கு சொந்தமான கடைகளுக்கு கடந்த ஜூன் மாதம் 16ம் தேதி பொது ஏலம் நடத்தப்பட்டது. 
மொத்தம் உள்ள 217 கடைகளில், 137 கடைகளுக்கு மட்டும் ஏலம் நடந்தது. ஏற்கனவே கடைகளை எடுத்து நடத்தி வந்தவர்கள் அதே கடைகளை  அதிக வாடகைக்கு ஏலம் எடுத்தனர். ஒரு சில கடைகளை மட்டுமே புது வியாபாரிகள் ஏலம் எடுத்தனர். ஏல விதிப்படி ஒப்பந்ததாரர்கள் 9 மாத வாடகை தொகையை முன் வைப்பு தொகையாக நகராட்சிக்கு செலுத்த வேண்டும். 
ஏலம் விடப்பட்டு 2 மாதங்களுக்கு மேலாகியும், ஒப்பந்ததாரர்கள் முன் வைப்புத் தொகையை செலுத்தவில்லை. இது குறித்து ஆணையர் நடவடிக்கை மேற்கொண்ட போது ஒப்பந்ததாரர்கள் கால அவகாசம் கேட்டனர். 
கால அவகாசம் அளித்தும் முன்வைப்புத் தொகை செலுத்தப்படவில்லை. இதனையடுத்து நகராட்சி ஆணையர் ராஜேந்திரன் மற்றும் அதிகாரிகள் நேற்று முன் வைப்புத் தொகை செலுத்தாத பேருந்து நிலையத்தில் 1, தினசரி மார்க்கெட் 3, திருப்பூர் சாலையில் 1, உடுமலை சாலையில் 2 என மொத்தம் 7 கடைகளை பூட்டி சீல் வைத்தனர்.

0 comments: