Friday, August 15, 2014

On Friday, August 15, 2014 by farook press in ,    
திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகில் மயான வசதி இல்லாததால், பிரேதங்களை ரோட்டின் ஓரங்களிலேயே புதைக்கும் அவல நிலை நீடித்து வருகிறது. இப்பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணாவிட்டால் போராட்டம் நடத்துவது என்று பொதுமக்கள் முடிவு செய்துள்ளனர்.
காங்கேயம் ஒன்றியத்திற்குட்பட்ட பொத்திபாளையம் ஊராட்சியில் தளிஞ்சிக்காட்டுப்புதுர் ,  மடக்காட்டு புதுர்  மற்றும்  பொத்திபாளையம் உட்பட 12 குக்கிராமங்கள் உள்ளன.இதில், தளிஞ்சிக்காட்டுப்புதுர்,  மடக்காட்டு புதூர்  ஆகிய இரு இடங்களிலும் மயான வசதி இல்லை இதுகுறித்து இப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகம் மற்றும் ஒன்றிய நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்துவிட்டனர். ஆனால், இதுவரை மயான வசதி செய்து கொடுக்கப்படவில்லை.
இதன்காரணமாக இப்பகுதியில் இறப்பவர்களின் பிரேதங்களை மடக்காட்டு புதூரில்  இருந்து பொத்திபாளையம் செல்லும் மெயின் ரோட்டின் ஓரங்களில் புதைத்து வருகின்றனர் . இதனால் இந்த வழித்தடத்தில் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர்.இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், மயான வசதி கோட்டு பலமுறை அதிகாரிகளிடமும் ஊராட்சி தலைவரிடமும் மனு கொடுத்தும் இதுவரை யாரும் கண்டுகொள்ளவில்லை. 
எனவே எங்களது நியாயமான கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம் என்றனர்.

0 comments: