Friday, August 29, 2014

On Friday, August 29, 2014 by TAMIL NEWS TV in ,    
லேப்டாப் வழங்ககோரி அமைச்சர் தோப்பு வெங்கடாசலத்திடம் மனு கொடுக்க வந்த மாணவர்களை போலீசார் விரட்டியடித்தனர். இதனால் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு சி.எஸ்.ஐ. ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சி.எஸ்.ஐ. ஆண்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளி, செங்குந்தர் மேல்நிலைப்பள்ளி, கலைமகள் பள்ளி மற்றும் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளை சேர்ந்த 2 ஆயிரத்து 447 மாணவ, மாணவிகளுக்கு இலவச லேப்டாப், சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் கலந்து கொண்டு இலவச லேப்டாப், சைக்கிள்களை வழங்கினார். இவ்விழாவில் கலெக்டர் சண்முகம், சட்டமன்ற உறுப்பினர்கள் ராமலிங்கம், கிட்டுசாமி, மாநகராட்சி மேயர் மல்லிகா பரமசிவம், துணை மேயர் பழனிச்சாமி, முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். 
மாலை 3 மணிக்கு விழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு மதியம் ஒருமணிக்கே மற்ற பள்ளிகளில் இருந்து மாணவ, மாணவிகளை அழைத்து வந்து விழா மேடை முன் நிற்க வைத்தனர். மற்ற பள்ளிகளில் இருந்து 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் மட்டுமே வந்திருந்தால் சி.எஸ்.ஐ. தொடக்கப்பள்ளி மாணவர்களை அழைத்து வந்து அமர வைத்தனர். இந்த விழாவில் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் வருகைக்காக பள்ளி மாணவ, மாணவிகளும் நீண்டநேரமாக காத்திருந்தனர். பின்னர் 4.30 மணியளவில் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் வந்த பிறகே விழா தொடங்கியது. 
விழாவில் முன்னாள் அமைச்சர் ராமலிங்கம் பேசிக் கொண்டிருந்தபோது மின்தடை ஏற்பட்டது. இதனால் 5 நிமிடங்களிலேயே பேச்சை முடித்துக் கொண்டார். பின்னர் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் பேசும்போது மின்தடை தொடர்ந்து இருந்ததால் பேட்டரி மைக் செட்டை கொண்டு வந்து வைத்தனர். இதனால் அமைச்சர் பேசியபோது சரியாக கேட்காததால் மாணவ, மாணவிகளிடையே சத்தம் அதிகமாக இருந்தது. அப்போது ஆளும்கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் மின்வாரியத்தினரை போனில் அழைத்து டோஸ் விட்டனர். 20 நிமிடங்களுக்கு பிறகு மின்சாரம் வந்தது. 

0 comments: