Thursday, September 04, 2014

On Thursday, September 04, 2014 by Unknown   
அமெரிக்காவில் செப்டம்பர் 11ஆம் தேதியை கேட்டாலே அந்நாட்டு மக்கள் நடுங்குவார்கள். கடந்த 2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதிதான் இரட்டை கோபுர தாக்குதல் நடந்தது. அதுமாதிரியான தாக்குதல் இந்த ஆண்டும் நடைபெற வாய்ப்பு உள்ளதாகவும், அதனால் அமெரிக்க அரசு மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என அமெரிக்க உளவுத்துறை இன்று எச்சரித்துள்ளது.

கடந்ஹ ஒரு மாதத்தில் லிபியாவின் தலைநகர் Tripoli என்ற நகரில் இருந்து கிளம்பிய 11 விமானங்களை இஸ்லாமிய தீவிரவாதிகள் கடத்தி தங்கள் வசம் வைத்திருப்பதாகவும், அந்த விமானங்கள் செப்டம்பர் 11ஆம் தேதி தாக்குதலுக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டு இருக்கலாம் என்றும் அமெரிக்க உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதனால் அமெரிக்காவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள அனைத்து விமான நிலையங்கள் மற்றும் முக்கிய இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கவும், வெளிநாட்டில் இருந்து வருபவர்களிடம் விசாரணையை தீவிரப்படுத்தவும் அமெரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் வானில் அனுமதியின்றி பறக்கும் விமானங்களை சுட்டு வீழ்த்தவும் பெண்டகன் உத்தரவு பிறப்பித்துள்ளது. வரும் செப்டம்பர் 11 முறை பல அடுக்கு பாதுகாப்பு முறையை கைப்பிடிக்குமாறு அமெரிக்க போலீஸார்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.












0 comments: