Thursday, September 04, 2014

On Thursday, September 04, 2014 by farook press in ,    
திருப்பூர் மாநகராட்சி 45 வது வார்டில் போட்டியிடும் 
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் சையத் முஸ்தபா 
வேட்பு மனு தாக்கல் செய்தார் 
திருப்பூர் மாநகராட்சி 45 வது வார்டிக்கு வருகிற 18 ம் தேதி 
நடைபெற உள்ள இடைத்தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் போட்டியிடும் திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் என். சையத் முஸ்தபா திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரியும்  மாநகராட்சி தெற்கு செயற்ப்பொறியாளருமான தமிழ்செல்வனிடம் வேட்புமனுவை வழங்கினார்.
வேட்பாளரை முன்மொழிந்த திருப்பூர் காமாட்சி அம்மன் கோவில் வீதி குடிஇருப்போர் நலசங்கநிர்வாகி ஜி.மோகன்குமார்,திருப்பூர் மாநகர் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் ஹாஜி கே.சிஹாபுதீன்,புறநகர் மாவட்ட செயலாளர் மங்கலம் அக்பர் அலி,மாநில பொதுக்குழு உறுப்பினர் இளம்பிறை ஜஹாங்கீர், வெல்பேர் பார்டி ஆப் இந்தியா திருப்பூர் மாவட்ட தலைவர் முஹம்மது காசிம், ஆகியோர்  வேட்புமனுதாக்கல் செய்தபோது உடனிருந்தனர்.
முன்னதாக திருப்பூர் பெரியகடை வீதியில் உள்ள மாநகர் மாவட்ட தலைமை அலுவலகத்தில் இருந்து வேட்பாளருடன் மாநில,மாநகர்,புறநகர்,மாவட்ட நிர்வாகிகள்,மங்கலம்பிரைமரி நிர்வாகிகள்,எம்.எஸ்.எப்,எம்.ஒய்,எல்,எஸ்.டி .யு,நிர்வாகிகள் ஊர்வலமாக சென்று ஈத்கா பள்ளிவாசலில் துஆ செய்து வேட்புமனு தாக்கல் செய்ய சென்றனர்


0 comments: