Monday, September 22, 2014

On Monday, September 22, 2014 by Unknown in ,    



அவினாசி புதிய பஸ் நிலையத்தில் அவினாசியிலிருந்து திருப்பூர் செல்லும் (வழித்தட எண் 32) டி.என்.38எண்1462 என்ற அரசு பஸ்சில் பொதுமக்கள், கல்லூரி மாணவ–மாணவிகள் உள்பட பலர் ஏறினர். கண்டக்டர் பயணிகளுக்கு டிக்கெட் கொடுத்து வந்தார்.
அவினாசியில் இருந்து திருப்பூர் செல்வதற்கு 8 ரூபாய் டிக்கெட்டை பயணிகளுக்கு கொடுத்துள்ளார். இதில் சில பயணிகள் கூடுதலாக பயணக்கட்டணம் கேட்பதாக கூறி சீட்டை வாங்க மறுத்தனர். அவினாசியில் இருந்து திருப்பூர் செல்ல கட்டணம் 5 ரூபாய் மட்டும்தானே, எதற்காக அதிக கட்டணம் கேட்கிறீர்கள் என கண்டக்டரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றவே பயணிகள் அவினாசி புதிய பஸ் நிலையத்தில் பஸ்சை சிறை பிடித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து பயணி ஒருவர் கூறுகையில், ‘இவ்வழியே இயங்கும் அனைத்து பஸ்களும் சாதாரண பஸ்களே. எனவே சாதாரண கட்டணம் தான் வசூலிக்க வேண்டும். போக்குவரத்து கழகத்தினர் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக் கின்றனர்.
இவர்கள் கேட்கும் கட்ட ணத்திற்கான ஆணை எதையும் அரசு வழங்கவில்லை. இதை அறியாமல் பயணிகள் ஏமாந்து வருகின்றனர். இது தொடர்பாக தகவல் உரிமைச் சட்டத்திலிருந்து, தகவலை பெற்று போக்குவரத்து நிர்வாகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது எனவே அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும் என்றார்.
இதுகுறித்து அறிந்த போலீசார், வட்டார போக்குவரத்து மோட்டார் வாகன ஆய்வாளர் பாலசுப் பிரமணியம் ஆகியோர் சம்பவ இடம் வந்து அதிக கட்டணம் வசூல் செய்யும் பஸ்கள் மீது தக்க நடவடிக்கை எடுப்பதாக பயணிகளை சமரசம் செய்தனர். இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பயணிகள் கலைந்து சென்றனர்.

0 comments: