Sunday, September 07, 2014

On Sunday, September 07, 2014 by farook press in ,    
பெருந்தலைவர் மக்கள் கட்சியின் ஆலோசனை கூட்டம் அவினாசியில் நடந்தது. கூட்டத்திற்கு கட்சியின் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர் ஐ.சி.ஈஸ்வரன் தலைமை தாங்கினார். திருப்பூர் வடக்கு மாவட்ட மகளிர் அணி தலைவர் எம்.அகிலா வரவேற்றார். மாவட்ட செயலாளர் வக்கீல் சாமிநாதன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில், நீண்டகால கோரிக்கையான அவினாசி–அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்றக்கோரி பொதுமக்களை ஒன்று திரட்டி, அவினாசி பஸ்நிலையம் அருகில் வருகிற 16–ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 3 மணி அளவில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முடிவில் அவினாசி ஒன்றிய செயலாளர் எம்.கார்த்திக் நன்றி கூறினார்.

0 comments: