Monday, September 29, 2014

On Monday, September 29, 2014 by farook press in ,    
திருப்பூர் மாவட்டம் பல்லடம் தெற்குபாளையம் முத்து நகரைச் சேர்ந்தவர் சின்னான்(வயது 51). இவர் பல்லடம் நகராட்சியில் குடிநீர் வினியோக ப்பாளராக பணியாற்றி வந்தார்.
நேற்று மாலை 4.30 மணி அளவில் பல்லடம்–மங்கலம் சாலையில் உள்ள கல்லம்பாளையம் பகுதியில் குடிநீர் திறந்து விட்டார். பின்னர் அருகில் உள்ள குறிஞ்சிநகர் பகுதிக்கு தண்ணீர் திறந்து விடுவதற்காக மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது கல்லம்பாளையத்தில் இருந்து பல்லடம் நோக்கி பாரம் ஏற்றி வந்த வேன் எதிர் பாராதவிதமாக சின்னான் ஓட்டிச்சென்ற மொபட் மீது மோதியது.
ரத்த வெள்ளத்தில் மிதந்த சின்னான் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்து பல்லடம் போலீசார் வழக்கு பதிவு செய்து வேன் டிரைவரை கைது செய்தனர். விபத்தில் பலியான சின்னானுக்கு மனைவி, ஒரு மகள் மற்றும் 3 மகன்கள் உள்ளனர்.

0 comments: